மது வாங்கி கொடுத்து வாலிபரிடம் நகை பறிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2018
01:58

புதுச்சேரி:மது வாங்கி கொடுத்து நண்பன்போல் பழகி, பணம் நகைகளை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணல்கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், லட்சுமணன், 25. சென்னையில் உள்ள ஓட்டலில் தங்கி, வேலை செய்கிறார். கடந்த 2ம் தேதி புதுச்சேரியை சுற்றிபார்க்க வந்த லட்சுமணன், பஸ் நிலையம் அருகில் உள்ள பாரில் மது குடித்துள்ளார்.

அவரது பக்கத்து டேபிளில் மது குடித்து கொண்டிருந்த, புது பஸ் நிலையம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த ஆனந்த், 26; சுப்பையா நகர் ராம்குமார், 24; ஆகியோர் லட்சுமணனுக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் மூவரும் நண்பர்களாகி உள்ளனர். பின்னர், லட்சுமணன் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1000 பணம் எடுத்து, புதுச்சேரியை சுற்றிப்பார்க்க புறப்பட்டனர். கடற்கரைக்கு சென்ற மூவரும், கடலில் குளித்துள்ளனர். போதையில் லட்சுமணன் அங்கேயே துாங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்தபோது, 1.5 சவரன் மோதிரம், வெள்ளி மோதிரம், ஏ.டி.எம்., கார்டு, ரூ. 1000 பணத்தை காணவில்லை. 2 வாலிபர்களும் மாயமாகி இருந்தனர்.

இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் லட்சுமணன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆனந்த், ராம்குமார் இருவரையும் கைது செய்து, வெள்ளி மோதிரம், ஏ.டி.எம். கார்டை பறிமுதல் செய்தனர். தங்க மோதிரத்தை அடமானம் வைத்துவிட்டனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X