இன்கோசர்வ் சொசைட்டி தேர்தல் சம பலத்தில் பா.ம.க., - த.வா.க.,
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2018
02:27

நெய்வேலி:என்.எல்.சி., இன்கோசர்வ் சொசைட்டி இயக்குனர்கள் தேர்தலில் த.வா.க.,வும் பா.ம.க.,வும் தலா 3 இடங்களைக் கைப்பற்றி சம பலத்துடன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

என்.எல்.சி., இன்கோசர்வ் சொசைட்டிக்கான தேர்தல் டவுன்ஷிப் வட்டம் 9ல் உள்ள என்.எல்.சி., பள்ளி வளாகத்தில் நடந்தது. உக்கிரமூர்த்தி தேர்தல் ஆணையராக செயல்பட்டார். தேர்தலில் 3292 ஓட்டுக்கள் பதிவானது.

என்.எல்.சி.,யின் நிரந்தர தொழிலாளர்களுக்கான அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களாக திகழும் தெ.மு.ச., மற்றும் சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்த 97 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் பணி துவங்கியது.

நேற்று காலை அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, த.வா.க., அன்பழகன், ரவிச்சந்திரன், சின்னபொண்ணு, பா.ம.க., ஜோதிமணி, செல்வமணி, ஜெயக்கொடி, வி.சி., சக்திவேல், சிவலிங்கம்.

அ.தி.மு.க., சத்தியபாமா, ஏ.ஐ.டி.யூ.சி., சம்பத்குமார் மற்றும் சுயேட்சை வேட்பாளர் பாலசுப்ரமணியன் ஆகிய 11 பேர் வெற்றி பெற்ற இயக்குனர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து வரும் 7ம் தேதி 2 இயக்குனர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.

தேர்தலில் அதிக அளவில் செல்லாத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. செல்லாத ஓட்டுக்கள் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X