ஒற்றையடி பாதை!போக்குவரத்து நெரிசலால் முக்கிய ரோடு... ஒரு வழிப்பாதையாக மாற்றாததால் பெரும்பாடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2018
04:22

உடுமலை:உடுமலை கச்சேரி வீதியில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வு காண, அந்த ரோட்டை ஒரு வழிப்பாதையாக மாற்றவும், ரோட்டில் வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்க வேண்டும்.

உடுமலை, கச்சேரி வீதியில், தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலம், நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை, கிளைச்சிறை, டி.எஸ்.பி., அலுவலகம், சார்நிலைக்கருவூலம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன், வனத்துறை அலுவலகம் நகராட்சி பள்ளி என, ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும் வணிக நிறுவனங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகளவு உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே உருவாக்கப்பட்டு, வரிசையாக அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்ட பெருமை கச்சேரி வீதிக்கு உண்டு.

தற்போது, இந்த ரோட்டில் வாகன போக்குவரத்தும் அபரிமிதமாக காணப்படுவதோடு, ரோட்டை ஆக்கிரமித்தே, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதனால், ரோட்டில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அதிகளவு நடக்கிறது. அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாமல், வாகன

நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.

தாலுகா அலுவலகம் முதல் கல்பனா ரோடு வரை உள்ள ரோட்டை, ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனை தெற்கு பகுதியிலுள்ள, பசுபதி வீதி, வக்கீல் நாகராஜன் ரோடு ஆகியவற்றை, இணைப்பு ரோடாக மாற்றி, இரு ரோடுகளையும், வருவதற்கு, செல்வதற்கு என, ஒரு வழிப்பாதையாக மாற்றினால், போக்குவரத்து நெரிசல் குறையும்.

அதே போல், அதிக பரப்பளவுடன் காலியாக, குட்டை திடல் உள்ள நிலையில், அங்கு வாகனங்களை நிறுத்தி விட்டு வரவும், பிரதான ரோட்டில் இரு புறமும் ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும். இதன் மூலம் ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும்.

அதே போல், உடுமலை நகரில் உள்ள பிரதான ரோடுகள், நிலவும் வாகன நெரிசல் குறித்து ஆய்வு செய்து, ஒருவழிப்பாதையாக மாற்றுதல், மையத்தடுப்பு அமைத்தல், ரோடு சந்திப்புகளில் ரவுண்டானா, உயர் மட்ட பாலங்கள் கட்ட வேண்டும். போக்குவரத்து துறை, போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து விரிவான ஆய்வு செய்து நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.

உடுமலை இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் கூறுகையில், 'நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஒருவழிப்பாதையாக மாற்றுவது குறித்து டி.எஸ்.பி., தாசில்தார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் உரிய ஆலோசனை பெற்று, மக்கள் கருத்து கேட்டு, உரிய

நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X