இடைவேளை?* வீட்டுமனை அங்கீகார பணிகளுக்கு... * 20 சதவீத மனை மட்டும் வரன்முறை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

06 செப்
2018
07:01
பதிவு செய்த நாள்
செப் 05,2018 23:55

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 20 சதவீதத்திற்கு குறைவான மனை மட்டும் வரன்முறை செய்துள்ள நிலையில், சிறப்பு முகாம் நடத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு இடைவேளை விட்டது ஏன் என, மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தமிழக அரசின் நகர ஊரமைப்புத்துறை சார்பில், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள, அங்கீகாரமற்ற வீட்டுமனை வரன்முறை செய்ய, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன. 2016 அக்., மாதத்திற்கு முன் கிரையம் செய்த வீட்டுமனை மற்றும் 'லே-அவுட்'களுக்கு, கட்டண அடிப்படையில் வரன்முறை செய்யப்படுகிறது.

உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் சாமானியர் நுழைய முடியாது என்ற நிலையை, மாவட்ட நிர்வாகம் மாற்றியது. வீட்டுமனை அங்கீகார பணி களை எளிதாக்க, மாவட்ட நிர்வாகம் புதிய வழிமுறைகளை கையாண்டது. உள்ளூர் திட்டக்குழுமம், விழிப்புணர்வு ஏற்படுத்த தவறினாலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, சிறப்பு முகாம் நடத்தியது மாவட்ட நிர்வாகம்.

தமிழக அரசு, நவ., மாதம் வரை மட்டுமே, அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறை செய்ய அவகாசம் வழங்கியுள்ளது. அதற்குள், தனி மனை உரிமையாளர்களும், 'லே-அவுட்' விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும், 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும்.

கலெக்டரின் நடவடிக்கையால், கடந்த சில மாதங்களுக்கு முன், மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்கள், மனை வரன்முறை செய்வது எளிதானது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியத்தில், ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 980 வீட்டுமனைகள் அங்கீகாரமற்றவை என கண்டறியப்பட்டது. சிறப்பு முகாம் நடத்தியதன் விளைவாக, 24 ஆயிரத்து, 518 வீட்டு மனைகள் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சி கட்டணமாக, ஒன்பது கோடி; மனை வரன்முறை கட்டணம் 8.50 கோடி ரூபாய் என, 17.50 கோடி ரூபாய் அளவுக்கு, அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருவாய் கிடைத்துள்ளது.

இருப்பினும், மாவட்ட அளவில், ஊரகத்தில் மட் டும், 1.03 லட்சத்துக்கும் அதிகமான, வீட்டுமனைகள் அங்கீகாரம் பெறாமல் உள்ளன. மொத்தம், 80 சதவீத மனைகள், வரன்முறை செய்யப்படாமல் உள்ளன.

வரும், நவ., மாதம், 13ம் தேதியுடன் அவகாசம் முடிவதால், அதற்குள் அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறை செய்ய, தகுந்த வழிகாட்டுதல் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X