வாழ்வில் சமரசம் செய்து கொள்ளாதவர் வ.உ.சி.,தமிழருவி மணியன் பேச்சு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2018
01:41

மதுரை, வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா சிந்தனைக் கருத்தரங்கம் மதுரையில் நடந்தது. வ.உ.சி., இலக்கிய பேரவை தலைவர் ஹரி மாதவன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் அசோக்ராஜ் வரவேற்றார்.காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி

மணியன் பேசியதாவது:சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக நின்றவர் வ.உ.சி., காந்தியும் அவரும் ஒரே மையப்புள்ளியில் சிந்தித்தவர்கள்.

வாழ்வில் எந்த நிலையிலும் அவர் சமரசம் செய்து கொண்டது இல்லை. லஞ்சம் வாங்கிய நீதிபதியை, வழக்கு தொடர்ந்து பணியை விட்டு நீக்கியவர். காந்தியின் போராட்டங்கள் ஆங்கிலேயர்களை வெளியேற்றாது என திடமாக நம்பியவர். அன்று நாட்டு நலன் குறித்து சிந்திக்க

ஏராளமான தலைவர்கள் இருந்தனர். இன்றுள்ள தலைவர்களுக்கு வீட்டு நலனை பற்றி சிந்திக்கவே நேரம் இல்லை. இவ்வாறு பேசினார்.

கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் பேசியதாவது:

வ.உ.சி., பேச்சாளராக, எழுத்தாளராக, பதிப்பாளராக திகழ்ந்தவர். வருமானத்திற்காக வழக்கறிஞர் தொழிலை அவர் பார்த்ததில்லை. 24 வயதில் தொழிலாளர்களுக்காக சங்கம் துவக்கியவர். கோரல் மில் ஆலையில் 14 மணி நேரமாக இருந்த பணி நேரத்தை குறைக்க வழிவகுத்தவர். 'உற்பத்தி பாதிக்கக்

கூடாது; அதே வேளையில் நம் உரிமையும் பாதிக்கக்

கூடாது' என நினைத்த சமூக போராளி.

இவ்வாறு பேசினார்.

ராகவேந்திரா மருத்துவமனை தலைவர் முருகன், வ.உ.சி., பேரன் சிதம்பரம் கலந்து கொண்டனர்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X