கட்டட தொழிலாளர்கள் வேலை இழப்பால்..கவலை. கூலியை குறைத்து பணிக்குச் செல்லும் நிலை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2018
01:44

கடலுார்: கட்டட தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காததால் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


கடலுார் மாவட்டம் முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியுள்ளது. கல்வியில் கடைசி மாவட்டமாக இருப்பதால் விவசாய கூலித்தொழிலாளர்கள், கொத்தனார்கள், சித்தாள், எலக்ட்ரீஷியன், பிளம்பர், தச்சர் உள்ளிட்ட பணிகளை செய்யும் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.

மேலும், இம்மாவட்டம் இயற்கை சீற்றத்தில் சிக்கும் மாவட்டமாக இருப்பதால் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் வாழ்வில் வளம்பெற முடியாத நிலை உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்குதல், அதைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு வீசிய 'தானே' புயல் ஆகியவற்றால் நிலை குலைந்த கடலுார் மாவட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தன.

அதில் குறிப்பாக ஏராளமான வீடுகளை தொண்டு நிறுவனங்கள் கட்டிக் கொடுத்தன. 90 ஆயிரம் 'தானே' வீடுகள் இம்மாவட்டத்தில் வழங்கப்பட்டன. இது தவிர பசுமை வீடுகள், மத்திய அரசின் இந்திரா குடியிருப்பு வீடுகள் என ஏராளமான வீடுகள் கட்டுமானப் பணியில் இருந்தன.


இதனால், கட்டட தொழிலாளர்களுக்கு ஏக கிராக்கியாக இருந்தது. அதேபோன்று, டைல்ஸ் ஒட்டுபவர், தச்சர், எலக்ட்ரீஷியன், பிளம்பர் போன்றவர்களுக்கும் அப்போது தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பெண்களுக்கு கொத்தனார் பயிற்சி அளிக்கப்பட்டு பயனாளிகளே கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர்.


மேலும், கட்டட தொழிலாளர்களுக்கு மற்ற மாவட்டத்தை விட கடலுார் மாவட்டத்தில் கூலி உயர்வு இருந்தது. தொழிலாளர்கள் கட்டடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகளை ஏற்றுக்கொண்டு இரவு பகலாக பணிகளை முடித்து கூடுதல் சம்பளம் பெற்றனர்.

ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கட்டட பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது.


ரியல் எஸ்டேட் விற்பனையும் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மணலும் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனால் கட்டட தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


அதேபோன்று, புதிய வீடுகளுக்கு கதவு போன்றவைகள் தயார் செய்யும் தச்சர்களுக்கு வேலையில்லாமல் போய் விட்டது. பெரும்பாலான இடங்களில் ரெடிமேட் கதவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேப்போன்று எலக்ட்ரீஷியன், பிளம்பர், டைல்ஸ் ஒட்டுபவர்கள் போன்றோர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.


இதுபோன்ற பிரச்னைகளால் கட்டட தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த நாள் கூலியான 650 முதல் 700 ரூபாயிலிருந்து 50 ரூபாய் குறைத்துக்கொண்டு பணிக்குச் செல்லும் நிலை உள்ளது.


இன்னும், பருவ மழை துவங்கி விட்டால், கட்டட வேலை கிடைப்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும் என கட்டட தொழிலாளர்கள் கவலைப்பட தொடங்கியுள்ளனர்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X