ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்: மலர் கொடுத்து மாணவர்கள் வாழ்த்து
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2018
09:15

தர்மபுரி: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு, தர்மபுரியில் உள்ள, பல்வேறு பள்ளிகளில், ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.


தர்மபுரி அவ்வையார் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் தலைமை வகித்தார். மாணவியருக்கு, பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.


* தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், தமிழ்த்துறை மாணவர்கள் சார்பில், கல்லூரி முதல்வர் ஹேமா தலைமை வகித்து, ராதாகிருஷ்ணன் படத்துக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உதவி பேராசிரியர்கள் கவுரவன், சரவணன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.


* செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் வளர்மதி தலைமையில், அனைத்துத் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று, ஆசிரியர் தினம் கொண்டாடினர். காரிமங்கலம் கே.ஜி.பி.வி., பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்து, பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மதுரைவீரன், சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன் உட்பட, பலர் பங்கேற்றனர்.


* கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அடுத்த, சின்னட்டி அரசு துவக்கப்பள்ளியில், ஆசிரியர் தின விழா, கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை ஜெயம்மா தலைமை வகித்தார்.


* தேன்கனிக்கோட்டை தாலுகா, பேவநத்தம் அடுத்த, காடுலக்கசந்திரம் அரசு துவக்கப்பள்ளியில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசுலு முன்னிலையில், ராதாகிருஷ்ணன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


* கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், மலர் தூவி ஆசிரியர்களை வரவேற்றனர். டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு குறித்து, மாணவியர் பேசினர்.


* கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் மகேந்திரன், பி.டி.ஏ., தலைவர் வெங்கடாஜலம் ஆகியோர் தலைமை வகித்தனர்.


* கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த விழாவில், கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். 2,000க்கும் மேற்பட்ட மாணவியர், மலர்கள் கொடுத்து, ஆசிரியர்களை வரவேற்றனர்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X