'பொறியாளர் அலுவலகத்தை கரூருக்கு மாற்றணும்': விவசாயிகள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2018
09:20

கரூர்: தாராபுரத்துக்கு மாற்றப்பட்ட அமராவதி ஆற்றின் வடிநிலக் கோட்ட பொறியாளர் அலுவலகத்தை, கரூருக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில், கடந்த, 1958ல், 90 அடி உயரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டது. கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிளை ஆறுகளான வரதமாஞ்சாதி, பாம்பாறு, நஞ்சைகாளக்குறிச்சி மற்றும் குடகானாறு மூலம், அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் வருகிறது. கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில், காவிரியாற்றில் அமராவதி ஆறு கலக்கிறது. அமராவதி ஆற்றின் மூலம், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், பழைய, புதிய ஆயக் கட்டுகளில் உள்ள வாய்க்கால் பகுதிகளில், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கரூர் மாவட்டத்தில், 11 வாய்க்கால்களில், ஒரு சில வாய்க்கால் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில், 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனால், விவசாயிகளின் கோரிக்கைபடி, அமராவதி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் பல ஆண்டுகளாக கரூரில் செயல்பட்டு வந்தது. இதன் மூலம், அமராவதி அணையின் நீர் இருப்பு, தண்ணீர் திறப்பு தேதி, வாய்க்கால் மராமத்து பணிகள் குறித்த விபரம், சாகுபடி விபரங்களை, கரூர் மாவட்ட விவசாயிகள் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது. இந்நிலையில், கடந்த, 2012ல், இந்த அலுவலகம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்துக்கு மாற்றப்பட்டது.


இதுகுறித்து, கரூர் பகுதி அமராவதி ஆற்றுப் பாசன விவசாயிகள் கூறியதாவது: அமராவதி ஆற்று நீரைக் கொண்டு, கரூர் மாவட்டத்தில் பயிர் சாகுபடி செய்வது படிப்படியாக குறைந்து வருகிறது. பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள பெரும்பாலான வாய்க்கால்கள் புதர் மண்டி காணப்படுகின்றன. சிலவற்றில் சாயக்கழிவு தான் ஓடுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஆயக்கட்டு பகுதி விவசாயிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதனால், 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மறைமுக விவசாய வேலைகள் கிடைக்கவில்லை. அமராவதி ஆற்றுப் பகுதி நிலவரம் குறித்து, விவசாயிகள் புகார் செய்ய, செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு கரூரில் இருந்தது. அதை தாராபுரத்துக்கு மாற்றிவிட்டதால், நாங்கள் மனு கொடுக்க வேண்டும் என்றாலும், 70 கி.மீ., தொலைவில் உள்ள தாராபுரம் தான் செல்ல வேண்டி உள்ளது. கரூர் மாவட்ட விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும், பொறியாளர் அலுவலகம் மீண்டும் கரூருக்கு மாற்றப்படவில்லை. அதை மீண்டும் இங்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X