விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கி.ரூ.20 கோடி!.. நிதி பற்றாக்குறையால் நிர்வாகம் திணறல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2018
23:13

விழுப்புரம் நகராட்சியில் உள்ள ரூ.20 கோடி வரி பாக்கியால், அடிப்படை வசதிகளை

நிறைவேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.


மாவட்டத்தின் தலைநகரில் உள்ள, விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளில், 1,41,625 பேர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் இணைப்பு, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து தருகிறது.


இதற்காக, நகராட்சி அலுவலகம் சார்பில், நகரப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடீநீர் இணைப்பு வரி, தொழில் வரி, சொத்து வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை வரி, நகராட்சி கடைகள் குத்தகை வரி, கடைகள் வைப்பதற்கு லைசென்ஸ் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகள் வசூலிக்கப்படுகிறது.


அதன்படி, நகராட்சி சார்பில் 8,069 குடிநீர் இணைப்புகளுக்கு வரி, 2,598 தொழில் நிறுவனங்களிடம் வரி, 39,569 நபர்களிடம் சொத்து வரி, 3,883 பாதாள சாக்கடை இணைப்பு வரி, 271 நகராட்சி கடைகளின் குத்தகை வரி ஆகியன வசூலிக்கப்படுகிறது.


இதன் மூலம், கிடைக்கும் நிதியை வைத்து, நகர மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால், நகராட்சியில் வரிபாக்கி அதிகளவில் உள்ளது. சொத்து வரியில் 11 கோடியே 69 லட்சம், தொழில் வரியில் 1 கோடியே 38 லட்சம், குடிநீர் இணைப்பு வரியில் 1 கோடியே 57 லட்சம், நகராட்சி கடைகள் குத்தகை வரியில் உழவர் சந்தை உட்பட 2 கோடியே 95 லட்சம், பாதாள சாக்கடை வரியில் 1 கோடியே 16 லட்சம், காலி மனை வரியில் 86 லட்சம் என மொத்தம் ரூ.20 கோடி வரி பாக்கி உள்ளது.


நகராட்சி அலுவலகத்திற்கு, தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வரி செலுத்தாமல் மெத்தனமாக உள்ளனர். இதனால், நகராட்சிக்கு நிதி பற்றாக்குறை அதிகரித்து, நகரில் சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.


அதிரடி நடவடிக்கை

நகராட்சிக்கு வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகளில் அதிகம் பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். அதில், முதல்கட்டமாக நுாறு இணைப்புகளை துண்டிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.


தொடர்ந்து, வரி செலுத்தாத தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள், வீடுகள் மீதும் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை பாய உள்ளது. தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட வரி செலுத்தாத நபர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஜப்தி செய்வதற்கான முயற்சியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.

எனவே, விழுப்புரம் நகராட்சிக்கு வைத்துள்ள வரி பாக்கியையும் செலுத்த அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.


-நமது சிறப்பு நிருபர்-

 

மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X