சுடுகாட்டில், 'அம்மா' உணவகமா? பாடியில் பொதுமக்கள் எதிர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2018
23:52

அம்பத்துார்:சுடுகாடு, குப்பை கிடங்கிற்கு அருகே, 'அம்மா' உணவகத்தை திறக்கக் கூடாது என, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.



சென்னை, அம்பத்துார் மண்டலம், 92வது வார்டு, பாடி சத்யா நகர், முகப்பேர் சாலையில், மாநகராட்சி சுடுகாடு உள்ளது. அதன் ஒரு பகுதி, தனியார் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டிருந்தன.



துர்நாற்றம்



சென்னை, உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, ஜனவரியில், மாநகராட்சி அதிகாரிகள், அந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றினர். அதன் மூலம், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,000 சதுர அடி இடம் மீட்கப்பட்டது.இதையடுத்து மாநகராட்சி, அந்த இடத்தில், மண்புழு உரம் மற்றும் மக்கும் குப்பை உரம் தயாரிக்கும் கிடங்குகளை கட்டி, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.



மேலும், 32 லட்சம்ரூபாய் மதிப்பில், 'அம்மா' உணவகத்திற்கான கட்டடம் அமைத்துள்ளனர். அந்த கட்டடம், இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.ஆனால் இப்பகுதியில், 'அம்மா' உணவகம் திறக்கக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது: 'அம்மா' உணவகத்தை ஒட்டி, குப்பை கிடங்கு, உரம் தயாரிக்கும் கிடங்கு மற்றும் சுடுகாடு

ஆகியவை உள்ளன.



சுடுகாட்டில், குறைந்த உயரத்தில் அமைந்துள்ள புகை கூண்டால், பிணம் எரிக்கப்படும் போது வெளிவரும் துர்நாற்றம், அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போரை பாதிக்கிறது.மேலும், மண் புழு உரம், மக்கும் குப்பை உரக்கிடங்குகளால், துர்நாற்றத்துடன், ஈ, கொசுக்கள் அதிகரித்து, சுகாதாரமற்ற நிலை நீடிக்கிறது. இதனால், சுற்றுவட்டார மக்கள், சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி தவிக்கின்றனர்.



புகார்



இந்நிலையில் இந்த இடத்தில், அம்மா உணவகம் அமைத்தால், அங்கு தயாரித்து, விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள், சுகாதாரமற்றதாக இருக்கும். இதனால், அங்கு சாப்பிடுவோர் உடல் நலம் பாதிக்கப்படுவர்.மேலும், அம்மா உணவகம் எதிரில், 'டாஸ்மாக்' கடை மற்றும் 'பார்' உள்ளது. அங்கு மது குடித்து, போதை ஏறிய, 'குடி'மகன்கள், அம்மா உணவகத்தில் நுழைந்தால், நிலைமை மேலும் மோசமாகும்.இது தவிர, குறுகலான அந்த சாலையில் ஏற்படும், போக்குவரத்து நெரிசலால், பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.எனவே, அம்மா உணவகத்தை, சுகாதாரமான இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



மேற்கண்ட இடத்தில், சுடுகாடு மற்றும் மூன்று வார்டுகளுக்கான உரக்கிடங்குகள் மட்டுமே இயங்குகின்றன. அங்குள்ள புதிய கட்டடம், தனியார் ஆக்கிரமிப்பை தவிர்ப்பதற்காக கட்டப்பட்டுள்ளது. அங்கு,அம்மா உணவகம் திறக்கப்பட மாட்டாது.



மாநகராட்சி அதிகாரி, அம்பத்துார் மண்டலம்

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X