கைதுக்கு பயந்து தி.மு.க., மாவட்ட செயலாளர் ஓட்டம்: கைவிடப்பட்டது கவர்னருக்கு எதிரான கறுப்புக்கொடி போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 செப்
2018
09:06

கரூர்: கைதுக்கு பயந்து, தி.மு.க., மாவட்ட செயலாளர் வெளியூருக்கு சென்று விட்டதால், கவர்னருக்கு எதிரான கறுப்புக்கொடி போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


கடந்த ஜூன், 22ல் நாமக்கல்லில் ஆய்வு பணிக்காக வந்த கவர்னருக்கு எதிராக, கறுப்புக்கொடி காட்டியதாக, தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டாலின் தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கவர்னரின் செயல்பாடுகள் மற்றும் பணிகளில் குறுக்கீடு செய்தாலோ, தவறான முறையில் தடுக்க முயன்றாலோ, அவர்களுக்கு அதிகபட்சமாக, ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வழி உண்டு என, கவர்னர் மாளிகை சார்பில், அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பிறகு கூட, பல மாவட்டங்களில், தி.மு.க.,வினர் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று கவர்னர் கரூர் வருவதை முன்னிட்டு, தி.மு.க., கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், கைதுக்கு பயந்து மாவட்ட செயலாளர் போராட்டத்தை நடத்தவில்லை என்ற தகவலால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.


இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், ஆளும் கட்சிக்கு சாதகமாக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் செயல்படுவதால், தி.மு.க., வளர்ச்சி தேய்பிறையாகி வருகிறது. கடந்த ஆண்டு சட்டசபையில், நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தபோது, கரூர் பஸ் ஸ்டாண்டில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது, சிலர் பஸ் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால், ராஜேந்திரன் உட்பட, 72 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, கைதாகும் சூழ்நிலை ஏற்படும் போராட்டத்தை தவிர்த்து வந்தார். இந்நிலையில் இன்று கவர்னர் வருகையை முன்னிட்டு, கறுப்புக்கொடி போராட்டம் நடத்த வேண்டி நிலை ஏற்பட்டது. இதற்கு, தலைமையில் தடை எதுவும் விதிக்காத நிலையில், கைதுக்கு அச்சப்பட்டு போராட்டத்தை நடத்துவதை தவிர்த்துள்ளார். எங்கு போராட்டம் என்று, தொண்டர்கள் மொபைல் போனில் ராஜேந்திரனிடம் தொடர்பு கொண்ட போது, ஏதாவது காரணம் சொல்லி வருகிறார். இன்று கவர்னருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து, தி.மு.க., பின்வாங்கி இருப்பது, கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில்,'' இன்று கவர்னருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தவில்லை, நான் வெளியூரில் இருக்கிறேன். அப்புறம் தொடர்பு கொண்டு பேசுகிறேன்,'' என்றார்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X