பஸ்சில் இடம் பிடிப்பதில் மாணவர்கள் மோதல்:கல்வீச்சு; கண்ணாடி உடைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
01:10

திருமங்கலம்;திருமங்கலம் அருகே பஸ்சில் இடம் பிடிப்பதில் கல்லணை, மைக்குடி கிராம மாணவர்களுக்கு இடையிலான மோதலில் கல் வீசப்பட்டதில் பஸ் கண்ணாடி உடைந்தது. 20 பேர் காயமுற்றனர். மூவர் கைது செய்யப்பட்டனர்.


கல்லணையிலிருந்து திருமங்கலம் செல்லும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இடம் பிடிப்பதில் மாணவர்களுக்கு இடையில் விரோதம் இருந்தது. நேற்று காலை 7:45 மணிக்கு கல்லணையிலிருந்து டவுன் பஸ் திருமங்கலம் நோக்கி சென்றது.


கல்லணையில் மாணவர்கள், தொழிலாளர்கள் ஏறியதால் பஸ் நிரம்பி விட்டது. பின் மைக்குடி மாணவர்களும் ஏறினர். கல்லணை, மைக்குடி மாணவர்கள் பஸ்சுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபடி வந்தனர். பஸ் லட்சுமிபுரம் அருகே வந்த போது மைக்குடி கிராமத்தை சேர்ந்த சிலர் மறித்தனர். கல்லணை மாணவர்களை கீழே இறக்கி தாக்க துவங்கினர்.இருதரப்புக்கும் மோதல் நடந்தது. இரு தரப்பும் கல்வீசினர். பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மாணவர்கள் முனீஷ், மருது உட்பட இருபது பேருக்கு காயம் ஏற்பட்டது. பின் இரு கிராமத்தினரும் சம்பவயிடத்திற்கு சென்று மாணவர்களை அழைத்து சென்றனர். போலீசார் விசாரித்து 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பிரகாஷ், விஷ்வா, அதிர்ஷ்டபிரபு கைது செய்யப்பட்டனர்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X