நாச்சிமுத்து டிராபி கிரிக்கெட் :திருப்பூர் கிளப் அசத்தல் வெற்றி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
01:58

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், நாச்சிமுத்து ரோலிங் டிராபிக்கான முதல் மண்டல கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்தன.

அவிநாசி டீ பப்ளிக் பள்ளியில் நடந்த, முதல் லீக் போட்டியில், மாருதி கிரிக்கெட் அகடாமி,

50 ஓவர்களில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 248 ரன்கள் எடுத்தது. லோகேஸ்வரன், 69 ரன் எடுத்தார். வெற்றி இலக்கை விரட்டிய திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் ரெக்ரியேஷன் கிளப் 'பி' அணி, 35.1 ஓவரில், 137 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது.


இரண்டாவது லீக் போட்டி, பல்லடம் அம்பாள் புரபஷனல் கல்லுாரியில் நடந்தது. இதில், பல்லடம் ஸ்டேடியம் ஸ்போர்ட்ஸ் அணியும், மாருதி கிரிக்கெட் அணியும் மோதின. முதலில் பேட் செய்த, 45.1 ஓவரில், 146 ரன் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய மாருதி கிரிக்கெட் கிளப் அணி, 31 ஓவரில், 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

உடுமலை அரசு கலை கல்லுாரியில், நடந்த மூன்றாவது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சர் ராபார்ட் ஸ்டேன்ஸ் அணியினர், 50 ஓவரில், 224 ரன் எடுத்தது. செல்வக்குமார் அதிகபட்சமாக, 85 ரன் எடுத்தார். கடின இலக்கை விரட்டிய, புளூராக் வாரியர்ஸ் அணி, 47.3 ஓவரில், 227 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.


நான்காவது லீக் போட்டி, வடுகப்பட்டி சுலோசனா மில்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த, எம்.எஸ்.எம்., கிரிக்கெட் கிளப் அணி, 47.1 ஓவரில், 239 ரன் எடுத்தது. அணியின் நாகராஜ் 53, குணசேகரன், 51 என, அரைசதம் கடந்தனர்.


சிறப்பாக பேட்டிங் செய்த திருப்பூர் கிரிக்கெட் அகடாமி அணியால், 47.5 ஓவரில், 218 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த அணி, 21 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பல்லடம் ஸ்கேடு பள்ளியில் நடந்த மற்றொரு லீக், போட்டியில் எப்.என்.எப்., கிரிக்கெட் கிளப் அணி மந்த ஆட்டம் ஆடியது.


இந்த அணி, 49.5 ஓவரில், 201 ரன் மட்டும் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் ரெக்ரியேஷன் கிளப் அணி, 28.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 144 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X