தமிழகத்தில் 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
02:42

திருநெல்வேலி: தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 412 மையங்களில் நேற்று முதல் பயிற்சிகள் துவங்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று நெல்லையில் இருந்து இரண்டாம் கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தின் சார்பில் தொடர்ந்து உதவிகள் கேரளத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்விற்கான பயிற்சி 412 மையங்களில் இன்று (நேற்று) பயிற்சி தொடங்கிறது. விடுமுறை நாட்களில் காலை , மாலைகளில் பயிற்சியளிக்கப்படும். மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமும் பயிற்சி வழங்கப்படும். இதற்காக 3,200 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரம் பள்ளிகளில் மையங்கள் தயார்படுத்தப்படும்.

கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் ஆயிரத்து 472 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 24 பேர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் ஆயிரம் பேருக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும், என்றார்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X