ஐகோர்ட் உத்தரவை மீறி அனுமதியற்ற பேனர்கள்... ஆளுங்கட்சி கூட்டம்; அவமதிக்கப்படும் சட்டம்! அகற்றாமல் வேடிக்கை பார்க்கும் அரசு அதிகாரிகள்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 செப்
2018
04:02
பதிவு செய்த நாள்
செப் 08,2018 02:43

ஆளுங்கட்சி செயல்வீரர்கள் கூட்டத்துக்காக, கோவை நகரின் பல பகுதிகளிலும், அனுமதியற்ற பேனர்கள், அத்துமீறி வைக்கப்பட்டுள்ளன; அவற்றை அகற்றாமல், அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.


பொது இடங்களில், விளம்பர பேனர்கள் வைக்க, மாநகர காவல் துறை பரிந்துரைப்படி, ஒரு பேனருக்கு, 250 ரூபாய் வீதமாக மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தி, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்; முறைப்படி விண்ணப்பித்தாலும், அவர்கள் அனுமதிக்கின்ற எண்ணிக்கையில் மட்டுமே, பேனர் வைக்க வேண்டும். சமீபகாலமாக, எத்தனை பேனர்களுக்கு அனுமதி கோரினாலும், அதிகபட்சமாக ஏழு பேனர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது.


இதற்கான உத்தரவிலும், 'விளம்பரத் தட்டிகளை, சரக ஆய்வாளர்கள் சிபாரிசு செய்யும் இடத்தில் மட்டும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றியும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாமலும், முக்கிய சாலை சந்திப்புகளிலும், போக்குவரத்து சிக்னல்களில், 100 மீட்டருக்கு அப்பாலும் வைக்க வேண்டும்' என்ற வார்த்தை இடம் பெறுகிறது; பேனர் வைக்க அனுமதிக்கப்பட்ட நாளும் குறிப்பிடப்படுகிறது.



அந்த நாள் முடிந்ததும், அவற்றை அகற்றிக் கொள்ள வேண்டுமென்பதும், காவல் துறை பரிந்துரையில் தெளிவாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற எந்த அனுமதியும் பெறாமலும், மாநகராட்சிக்கு உரிய கட்டணமும் செலுத்தாமலும், கோவை நகரில் ஆளுங்கட்சி சார்பில் பேனர்கள் வைப்பது, சர்வ சாதாரணமாகி விட்டது. ஐகோர்ட் உத்தரவை அப்பட்டமாக மீறி, சாலை சந்திப்புகள், சிக்னல்கள் அருகிலேயே இவை வைக்கப்படுகின்றன.எந்த பேனரையும், போலீசாரோ, மாநகராட்சி அதிகாரிகளோ அகற்றுவதில்லை; மாவட்ட நிர்வாகம், இத்தகைய அத்துமீறலை துளியும் கண்டுகொள்வதே இல்லை. இதனால், ஆளுங்கட்சியினரின் சார்பில், ஆண்டு முழுவதும் பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுவது, வாடிக்கையான வேடிக்கையாகி விட்டது. கடந்த இரு நாட்களாக, கோவை நகரின் பல பகுதிகளில், அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் தொடர்பான பேனர்கள் காணப்படுகின்றன.


புலியகுளம் விக்னேஷ் மஹாலில் நடக்கும் இக்கூட்டம் பற்றி, சுங்கம் சிக்னல் அருகிலேயே சுற்றிச் சுற்றி பல பேனர்களை ஆளுங்கட்சியினர் வைத்துள்ளனர்; கோர்ட் வளாகத்தின் எதிரிலும், அனுமதியற்ற பேனர்களைப் பார்க்க முடிகிறது. எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூணன் மகன் கோபால

கிருஷ்ணன் பெயரில், தேசிய நெடுஞ்சாலையான திருச்சி ரோட்டில் ஐகோர்ட் உத்தரவை பகிரங்கமாக மீறி, பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.


விதிகளை மீறியும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களை அகற்ற வேண்டிய பொறுப்பு, மாநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உள்ளது; இதற்கான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம், கலெக்டருக்கு உள்ளது.


ஓர் உயிர் பலி போதாதா?


கடந்த ஆண்டு நவ., 25ல், கோவையில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவிநாசி ரோட்டில் ஆளுங்கட்சியினர் வைத்த, 'கட்-அவுட்'டில் மோதி, அமெரிக்காவில் பணியாற்றி வந்த, கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ரகு, 32, உயிரிழந்தார். அதற்கே இன்னும் நியாயம் கிடைக்காத நிலையில், கோவை நகரில் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், மீண்டும் மீண்டும் ஆளுங்கட்சியால் பேனர்கள் வைக்கப்படுகின்றன.


-நமது நிருபர்-

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-செப்-201809:14:12 IST Report Abuse
Pugazh V ம.அரசின் ஆசி பெற்ற ஆட்சி. தமிழிசை சொன்னால் தான் போலீஸே நடவடிக்கை எடுப்பார்கள். அப்புறம் எங்கே அதிகாரிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X