| நால்ரோடு சந்திப்பில் தடுமாறும் வாகனங்கள் :மேம்படுத்தினால் குறையும் போக்குவரத்து நெரிசல் Dinamalar
நால்ரோடு சந்திப்பில் தடுமாறும் வாகனங்கள் :மேம்படுத்தினால் குறையும் போக்குவரத்து நெரிசல்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
04:21

உடுமலை:உடுமலை அருகே, மாநில நெடுஞ்சாலை சந்திப்பில், ரோடு, பராமரிப்பு இல்லாமல், குண்டும், குழியுமாக காணப்படுவதால், விபத்துகள் அதிகரித்துள்ளது.

பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, உடுமலை - செஞ்சேரிமலை, ரோடுகள் இணையும், முக்கிய சந்திப்பாக பெதப்பம்பட்டி அமைந்துள்ளது. பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், பூசாரிபட்டி முதல் குடிமங்கலம் வரை, உடுமலை

உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ளது.


இருமாவட்ட வாகனங்கள், சரக்கு வாகனங்கள், சுற்றுலா மற்றும் உள்ளூர் வாகனங்கள் என, நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நால்ரோடு சந்திப்பு பகுதியில், பராமரிப்பில்லாமல், ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

பல மாதங்களாக சேதமடைந்து காணப்படும் ரோட்டினை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. வாகன விபத்துகளும் தவிர்க்க முடிவதில்லை.


இதையும் கவனிக்கணும்!


நால்ரோடு பகுதியில், விதிகளை மீறி, 'பிளக்ஸ்' பேனர்கள் அதிகளவு வைக்கப்படுகிறது. குறிப்பாக, ரோடு திரும்பும், குறுகலான இடத்தில், பேனர் வைக்கப்பட்டு, நெரிசல் அதிகரிக்கிறது.

நேற்று முன்தினம், உடுமலை ரோட்டை ஒட்டி, வைத்திருந்த பேனர், காற்றின் வேகத்தால், கீழே விழுந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

குடிமங்கலம் போலீசார் விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்ற வேண்டும்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X