வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்:நாளை 580 மையங்களில் நடக்கிறது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
04:24

உடுமலை;உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நாளை, 580 ஓட்டுப்பதிவு மையங்களில் நடக்கிறது.

உடுமலை, மடத்துக்குளம் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த, 1ம் தேதி வெளியிடப்

பட்டது.பொதுமக்கள் பார்வைக்காக, ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அக்.,31 வரை, இரண்டு மாதங்கள் திருத்த பணிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


வாக்காளர் வசதிக்காக, நாளை, 9ம் தேதி மற்றும் 23 மற்றும் அக்., 7, 15 ஆகிய தேதிகளில், சிறப்பு முகாம் நடக்கிறது. காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.

உடுமலை தொகுதியிலுள்ள,, 120 ஓட்டு பதிவு மையங்களிலுள்ள, 293 ஓட்டுச்சாவடிகளிலும், மடத்துக்குளம் தொகுதியிலுள்ள, 117 ஓட்டுப்பதிவு மையங்களிலுள்ள, 287 ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. 2019 ஜன.,1ல், 18 வயது நிரம்ப உள்ளவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.


பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம், தொகுதிக்குள் குடியிருப்பு மாற்றம் செய்ய விண்ணப்பிப்பதற்கு தனித்தனியாக படிவங்கள் உள்ளன. ஓட்டுச்சாவடி மைங்களுக்கு தேவையான படிவங்கள், வாக்காளர்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்து போஸ்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


சிறப்பு முகாம்கள் குறித்த தகவல்களை, உடுமலை தொகுதி வாக்காளர்கள், உடுமலை தாசில்தாரை., 94450-00578; மடத்துக்குளம் தொகுதி வாக்காளர்கள், மடத்துக்குளம் தாசில்தாரை, 95979-10477 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.மேலும், இரு தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலரான ஆர்.டி.ஓ.,வை, 99948-55413 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X