| கழிவுநீர் தேங்கும் வாளவாடி குளம்:குடியிருப்பு மக்களுக்கு தீராத அவலம் Dinamalar
கழிவுநீர் தேங்கும் வாளவாடி குளம்:குடியிருப்பு மக்களுக்கு தீராத அவலம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
04:28

உடுமலை:உடுமலை வாளவாடியில், நீர் தேங்க வேண்டிய குட்டை, கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.உடுமலை அருகேயுள்ள வாளவாடியில், 20 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளமும், குளம் நிரம்பினால், ஏழு ஏக்கர் பரப்பளவிலுள்ள குட்டையும் நிரம்பும்.

பூலாங்கிணர் ரோட்டிலுள்ள, குட்டை, வாளவாடி கிராம மற்றும் சுற்றுப்புற விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாக உள்ளது. கடந்த, 10 ஆண்டுக்கு மேலாக நீர் வரத்து இல்லை.


வீடுகள், கடைகளிலிருந்து வெளியேறும், சாக்கடை கழிவுகள் அனைத்தும் குட்டையில் தேங்கி, துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதாரகேடு ஏற்படுத்தும் மையமாக மாறியுள்ளது.

மேலும், குட்டை கரையில் பன்றிகள் வளர்ப்பதால், பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகிறது. அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ள நிலையில், குழந்தைகளுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குட்டையில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குட்டைக்கு வரும் நீர் வழித்தடத்தை, பருவ மழைக்கு முன்பு துார்வாரி, ஊருக்கு மத்தியிலுள்ள உள்ள குட்டையில் மழை நீர் தேங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X