அத்துமீறி பிளக்ஸ் வைத்து அட்டகாசம்:அப்புறப்படுத்த தயங்கும் அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 செப்
2018
06:38
பதிவு செய்த நாள்
செப் 08,2018 06:35

வால்பாறை:வால்பாறையில் விதிமுறைகளை மீறி ஆளுங்கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள, பிளக்ஸ் பேனர்களை அகற்ற, நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் தயக்கம் காட்டுகின்றனர்.

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பிளக்ஸ் விளம்பரம் வைக்க, போலீஸ் மற்றும் நகராட்சியில் தடையின்மை சான்று பெற்று, மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்.

நிகழ்ச்சிக்கு மூன்று நாட்கள் முன், நிகழ்ச்சிக்கு பின்இரண்டு நாட்களுக்கு பிளக்ஸ் வைத்துக் கொள்ளலாம். இதற்கு, நகராட்சி அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ஆனால், வால்பாறை நகரில் அ.தி.மு.க.,வினர் கடந்த, 2ம் தேதி கட்சி ஆலோசனைக்கூட்டத்துக்கு, அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.


வால்பாறை கண்ணாடி மாளிகை, நகராட்சி நடைபாதை, நகராட்சி அலுவலகத்தின் முன் பகுதி, காந்திசிலை, போஸ்ட் ஆபீஸ் முன்பகுதி என பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் அகற்றப்படவில்லை.ஒரு வாரமாகியும் அவற்றை அகற்றாமல் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வைத்துள்ளனர். தற்போது, பலத்த காற்று வீசுவதால் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.


எனவே, வால்பாறை நகரில் ஆளுங்கட்சியினர்விதிமுறையை மீறி வைக்

கப்பட்டுள்ள அனைத்து பிளக்ஸ்களை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆளுங்கட்சியினரே விதிமுறைகளை கடை

பிடிக்காமல், பிளக்ஸ் வைத்து, மற்ற கட்சியினர் விதிமுறைகளை மீறுவதற்கு முன்னுதாரணமாக உள்ளனர். மேலும், அரசியல் தலையீடு காரணமாக அனுமதியற்ற பிளக்ஸ்களை அகற்ற அதிகாரிகளும் தயங்குகின்றனர்.



அறிவிப்பு என்னாச்சு!


காந்திசிலை வளாகம் எஸ்டேட் பகுதிகளுக்கான பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. அங்கு, அரசியல் கட்சிகள் பிளக்ஸ் வைக்கவோ, தனியார் விளம்பரம் வைக்கவோ, நகராட்சி நிர்வாகம் தடை விதித்து எச்சரிக்கை அறிவிப்பு வைத்துள்ளது.அந்த அறிவிப்பை மறைத்து, போக்குவரத்துக்கு இடையூறாக, பொறுப்புணர்வின்றி அ.தி.மு.க.,வினர் பிளக்ஸ் விளம்பரம் வைத்துள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X