| நொய்யல் ஆற்றில் பாய்ந்தோடும் கழிவுநீர்:சுத்திகரிப்பும் சுகாதாரமும் கேள்விக்குறி Dinamalar
நொய்யல் ஆற்றில் பாய்ந்தோடும் கழிவுநீர்:சுத்திகரிப்பும் சுகாதாரமும் கேள்விக்குறி
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
06:50

செங்கத்துறை:நொய்யலாற்றில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஆனால், அந்த நீரில் சாக்கடை நீர் கலப்பதால், தண்ணீர் சுகாதாரமின்றி மாசடைந்து; நோய்த் தொற்றை பரப்பும் நிலையில் உள்ளது.கோவையிலிருந்து சூலுார் புறநகர் பகுதிகளின் வழியே செங்கத்துறை, செந்தேவிபாளையம், சேடர்பாளையம் வழியாக, திருப்பூர் மாவட்டத்தை நோக்கிச் செல்கிறது நொய்யலாறு. இதில், சூலுார் ஒன்றியத்தில் உள்ள செங்கத்துறையில் தடுப்பணை

உள்ளது.


கடந்த மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக நொய்யலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது, ஆற்றுவழித்தடத்தில் இருந்த கழிவுகள் அத்தனையும் அடித்துச்செல்லப்பட்டு தடுப்பணைகளிலிருந்து தண்ணீர் நுங்கும் நுரையுமாக புதுவெள்ளம்

பொங்கிப் பாய்ந்தது.

இப்போது மழை பெய்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. நொய்யலாற்றின் நீர் வரத்து குறைந்துவிட்டது. ஆனால், மழைநீருக்குப் பதிலாக இப்போது ஆற்றின் வழியெங்கும் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து, நிறம் மாறியுள்ளது.


நோய்த்தொற்று அபாயம்


இதனால், தடுப்பணைகளில் தேங்கியிருக்கும் நீர் சாக்கடைக் குளம்போல மாறியுள்ளது. சூலுார் ஒன்றியத்தில் உள்ள செங்கத்துறை தடுப்பணையிலும் நீர் நிரம்பிக் காட்சியளிக்கிறது.

ஆனால், அணையைத்தாண்டி ஆற்றில் பாயும் நீர் கழிவுநீராகத்தான் உள்ளது.

மேலும் ஆற்றுப்பகுதிகளிலும் மனிதக்கழிவும், கோழி இறைச்சிக்கழிவும் கொட்டப்படுவதால் நீர் முழுக்க கெட்டு சுகாதாரமின்றி காணப்படுகிறது. துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.

இதேநிலை நீடித்தால், நொய்யலாற்றின் இருகரைகளிலும் உள்ள கிராமங்களிலும் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


சுத்திகரிக்க வேண்டும்


விவசாயிகள் கூறுகையில், 'மழையின் போது, நொய்யலாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தைப் பார்க்கவே மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சி கொஞ்சநாள் கூட நீடிக்கவில்லை. கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட வேண்டும். இல்லாவிடில், ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். தடுப்பணைகளில் கழிவுநீர் தேங்கி இருந்தால், தொற்று நோய்கள்கள் பரவும் அபாயம் ஏற்படும்' என்றனர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X