| தண்ணீர் வினியோகம் தடை சோமனூர் மக்கள் கவலை Dinamalar
தண்ணீர் வினியோகம் தடை சோமனூர் மக்கள் கவலை
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
06:53

சோமனுார்:கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, இளச்சிபாளையம் அடுத்து சவுடேஸ்வரி நகர், செகுடந்தாளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பேரூராட்சியின் எல்லையில் உள்ள இந்த கிராமங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகிப்பதில்லை. இதனால், அப்பகுதியில் வசிப்போர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


குடியிருப்பு வாசிகள் கூறுகையில், 'மற்ற இடங்களை காட்டிலும் எங்கள் பகுதிக்கு வினியோகிக்கப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளது. விரைவில் இங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து கூடுதலாக தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

பேரூராட்சி அதிகாரி கூறுகையில், ''மாதப்பூர் செல்லும் பகுதிக்கு அண்மையில்தான்

எம்.எல்.ஏ., கனகராஜின் நிதியில் இருந்து, 7 லட்சம் ரூபாய் பெறப்பட்டு, ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. மற்ற இடங்களிலும் அமைக்க நிதிக்காக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. செகுடந்தாளி உள்ளிட்ட பகுதிகள் மேடாகவுள்ளன. மோட்டார் மூலம் கூடுதலாக பம்பிங் செய்யப்பட்டு தண்ணீர் வினியோகம் சீர் செய்யப்படும்' என்றார்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X