கரூரில் பஸ் பாடி கட்டும் பூங்கா அமையுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
10:11

கரூர்: கரூரில், பஸ்களுக்கு பாடி கட்ட அரசு சார்பில் தனி பூங்கா அமைக்கப்படுமா என, தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில், கரூரில், 70க்கும் மேற்பட்ட பஸ் பாடிகட்டும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒரு பஸ்சுக்கு பாடி கட்ட, 20 முதல், 25 நாட்கள் வரை ஆகும். 40 முதல், 50 தொழிலாளர்கள் வரை, பணி செய்வர். கரூரில், 10 முதல், 15 பஸ் பாடிகட்டும் நிறுவனங்கள் தான் சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றன. மீதமுள்ள நிறுவனங்கள், மூன்று முதல், ஐந்தாண்டு வரை, வாடகை ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வருகின்றன. குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகு, உபகரணங்களை வேறு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், பஸ் பாடி கட்ட தேவையான உபகரணங்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. இதனால், கால விரயம், கூடுதல் செலவு ஆகிறது. தனி பூங்கா அமைக்கப்பட்டால், மூலப்பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் மற்றும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும், கரூருக்கு வர வாய்ப்புண்டு. சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாததால், விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பும் இருக்காது. இதனால், கரூரில் நீண்ட நாள் கோரிக்கையான பஸ் பாடி கட்ட தனி பூங்கா அமைக்க வேண்டும் என, இத்தொழிலை சார்ந்துள்ள ஏராளமானோர் எதிர்பார்க்கின்றனர்.


இதுகுறித்து, கரூரைச் சேர்ந்த பஸ் பாடி கட்டும் தொழிலாளர்கள் கூறியதாவது: கரூரில் செயல்பட்டு வரும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்களில், நாமக்கல், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். ஒரு நிறுவனத்தில் வேலை இல்லாதபோது, தொலைவில் உள்ள வேறு நிறுவனத்தை தேடிச் செல்லும் நிலை உள்ளது. பூங்கா அமைக்கப்படும் பட்சத்தில், ஒரு நிறுவனத்தில் வேலை இல்லாவிட்டால், அருகில் உள்ள வேறு நிறுவனத்துக்கு செல்வது எளிதாக இருக்கும். ஒரே இடத்தில் பல நிறுவனங்கள் செயல்படுவதால், பணியில் அதிக தரம் இருக்கும். பூங்கா அமைக்கும் பட்சத்தில், இன்னும் கூடுதலான பஸ்களுக்கு பாடி கட்ட வாய்ப்பு ஏற்படும். அதிக தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். பஸ் பாடி கட்ட பூங்கா அமைக்க, கரூர் புறநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


அமைச்சர் கண்டுகொள்வாரா ? கடந்த, 2011 முதல், 2014 வரை, கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். 2016 முதல், விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். ஆனால், பஸ் பாடி கட்ட தனி பூங்கா அமைக்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் பல ஆண்டு கோரிக்கையை இருவருமே கண்டு கொள்ளவில்லை. இனியாவது இந்த கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சர் விஜயபாஸ்கர் கவனம் செலுத்த வேண்டும் என, தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


 

மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X