போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2018
23:43

பெண்ணிடம் நகை பறித்தவன் கைது

மாதவரத்தைச் சேர்ந்தவர், ரமா பிரபா, 35. அவர், ஆக., 29ல், கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். மாதவரம் ரவுண்டானா மேம்பாலத்தில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரது, 6 சவரன் செயினை பறித்து சென்றான்.மாதவரம் போலீசார், மாதவரத்தைச் சேர்ந்த முகமது ரபீக், 22, என்பவனை, நேற்று காலை கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர்.

'மினி வேன்' திருடியவன் கைது


மாம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன ஓட்டுனர், கார்த்திக், 24. நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில், ஆவடி, எச்.வி.எப்., சாலையோரத்தில், மினி வேனை நிறுத்திச் சென்றார். மீண்டும் வந்த போது, வாகனத்தை காணவில்லை. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், அமைந்தகரையைச் சேர்ந்த கார்த்திகேயன், 24, என்பவனை, நேற்று காலை கைது செய்து, மினி வேனை மீட்டனர்.


நகை, பணம் பறித்த சாமியார் கைது


பூந்தமல்லி அடுத்த, குமணன்சாவடியைச் சேர்ந்தவர், வசந்தா, 55. இவர், தன் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டி, சாமியார் பாபு என்பவனை அழைத்து வந்து, கடந்த வாரம், வீட்டில் பூஜை செய்துள்ளார். அப்போது, மேல்மலையனுார் கோவிலில் வைத்து பூஜை செய்வதாக, 15 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாயை வாங்கிச் சென்ற அவன், பின் தலைமறைவானான். பூந்தமல்லி போலீசார், மேல்மலையனுாரில் பதுங்கி இருந்த பாபுவை, நேற்று காலை கைது செய்தனர்.


பெண்ணிடம் நகை பறிப்பு


மணலி அடுத்த விச்சூரைச் சேர்ந்தவர், தமிழ்வாணன், 30. அவர், மனைவி திவ்யாவுடன், நேற்று மாலை, 6:30 மணியளவில், அம்பத்துாரில் இருந்து வீட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கள்ளிக்குப்பம் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், திவ்யாவின், 5 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


ரூ.32 லட்சம் மோசடியில் இருவர் கைது


அண்ணாநகர் கிழக்கைச் சேர்ந்தவர், சுகுமார், 45; டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர், வாகனங்களுக்கான டீசல் வாங்கியதற்கான ஆவணங்களை ஆய்வு செய்ததில், 32 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது.அண்ணாநகர் போலீசார் விசாரணையில், ஊழியர்களான அருண் சஞ்சய், 31; விஜய், 31, ஆகியோர் மோசடி செய்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஹரிபாபுவை தேடி வருகின்றனர்.

பணம் பறித்த மூவர் கைது


திருவேற்காடு, வீரராகவபுரத்தைச் சேர்ந்தவர், முருகன், 33; பழைய கார்கள் வாங்கி, விற்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், வீட்டில் இருந்த முருகனை, காரில் வந்த மூன்று மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். பின், 1.50 லட்சம் ரூபாய் செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்து தப்பினர்.திருவேற்காடு போலீசார், மாதவரத்தைச் சேர்ந்த ராஜா, 34, உட்பட மூவரை, நேற்று மாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.


கடன் மோசடியில் ஒருவன் கைது


திருவான்மியூரைச் சேர்ந்தவர் அருண்; தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர். இவரிடம், மதுரவாயலைச் சேர்ந்த தியாகராஜன், 50, என்பவன், 5 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று தருவதாக, 26.50 லட்சம் ரூபாய், கமிஷன் பெற்று, ஏமாற்றி வந்துள்ளான். மத்திய குற்றப்பிரிவு போலீசார், தியாகராஜனை நேற்று கைது செய்தனர்.


ஐ.டி., ஊழியரிடம் மொபைல் பறிப்பு


ஷெனாய் நகரைச் சேர்ந்தவர், சக்திவேல், 24; ஐ.டி., நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றார். அப்போது வந்த மூவர், கத்தியை காட்டி மிரட்டி, சக்திவேலின் மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு மற்றும், 500 ரூபாயை பறித்துச் சென்றனர். எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X