கோவை மாவட்ட செய்திகள்.....
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 செப்
2018
00:09

கோவை:பொது வினாத்தாள் பாணியில் காலாண்டு தேர்வு, நாளை துவங்குகிறது. பாடத்திட்டமே பல பள்ளிகளில் முடிக்காததால், மாணவ மாணவியர் கலக்கத்தில் உள்ளனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை (10ம் தேதி) முதல், 22 வரை, காலாண்டு தேர்வு நடக்கிறது. பிளஸ் 1 வகுப்புக்கு புதிதாக பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்களுக்கு, பாடப்புத்தகம் முறையாக வழங்கவில்லை என்ற புகார் உள்ளது. ஜூன் இறுதியில் தான், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. பல பள்ளிகளில், 'சிலபஸ்' முழுமையாக கற்பிக்கப்படவில்லை.


புதிய 'சிலபஸ்' படி, பாடத்துக்கு பின்புறம், கேள்விகள் கொடுக்கப்படவில்லை. பாடக்கருத்துகள் முழுவதையும் படித்து, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும். முக்கிய பகுதிகள் எவை, கேள்விக்கு பதில் எழுதும் முறை குறித்த பயிற்சி அளிக்கப்படவில்லை. முதல் இடைப்பருவத்தேர்வுக்கு, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. காலாண்டு தேர்வு பொது வினாத்தாள் பாணியில் நடக்க உள்ளது. அதிக பாடக்கருத்துகள் உள்ளதால், மாணவர்கள் சிரமப்படுவதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.


அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஒவ்வொரு பாடத்துக்கும் வினாக்கள் இல்லாததால், தனியார் நிறுவன, 'கைடு' படிக்க பரிந்துரைக்கிறோம். எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது கேள்விக்குறியே. மாணவர்களுக்கு வழங்காவிட்டாலும், ஆசிரியர்களுக்கு வழிகாட்டி கையேடு வழங்கினால், பின்தங்கிய மாணவர்களை வழிநடத்த உதவியாக இருக்கும். 'அனைத்து பாடங்களையும் படிக்க சிரமப்படும் மாணவர்கள், இத்தேர்வு குறித்து, அச்சத்தில் உள்ளனர். வினாத்தாள் வந்தால் மட்டுமே, எப்படி வழிநடத்துவது என்ற புரிதல் கிடைக்கும்' என்றனர்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X