உற்பத்தி சரிவால் கரும்பு ஆலைகளுக்கு விரைவில் மூடுவிழா: விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 செப்
2018
11:39

'தமிழகத்தில், கரும்பு உற்பத்தியில், மூன்றில், இரண்டு பங்கு குறைந்துள்ளதால், பாதி சர்க்கரை ஆலைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளித்து, உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகத்தில், அரசு, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு என, மொத்தம், 44 சர்க்கரை ஆலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், கரும்பு அரவை பருவத்தில், மத்திய அரசு நியாயமான ஆதாய விலையை அறிவிக்கும். அதையடுத்து, மாநில அரசு, பரிந்துரை விலையுடன் சேர்ந்து, கரும்புக்கான கொள்முதல் விலையை, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும். 2017-18ல், கட்டுப்படியான விலை கிடைக்காததால், கரும்பு விவசாயிகளுக்கு, டன்னுக்கு, 200 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக, பட்ஜெட்டில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். அதற்காக, 200 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. ஐந்து மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரை அறிவித்தது போல், விவசாயிகளின் வங்கிக் கணக்கில், டன் ஒன்றுக்கு, 200 ரூபாய் வரவு வைக்கப்படவில்லை. இது, எப்போது வரவு வைக்கப்படும் என, விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். மேலும், 2018-19 அரவை பருவத்துக்கு, கரும்புக்கு புதிய விலை கொள்கை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதற்கான அரசாணை வெளியிடவில்லை. அக்., 1 முதல், 2018-19ம் ஆண்டுக்கான அரவை பருவம் துவங்க உள்ளது.இது கரும்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து, இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தேசிய தலைவர் விருத்தகிரி கூறியதாவது: கரும்புக்கு, மாநில அரசு அறிவித்த ஊக்கத்தொகையும், புதிய விலை கொள்கையையும் அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த நியாயமான ஆதாய விலைக்கு கூடுதலாக, இதர மாநிலங்கள் வழங்குவதுபோல், தமிழக அரசும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அப்போது தான், தமிழகத்தில் கரும்பு உற்பத்தி பெருகும். இல்லையெனில், கரும்பு உற்பத்தி கடும் சரிவுக்கு போய் விடும். தற்போது, மூன்றில், இரண்டு பங்கு கரும்பு உற்பத்தி குறைந்துவிட்டது. மொத்தம் உள்ள, 44 ஆலைகளில், பாதி ஆலைகள், இயங்குவதற்கு கரும்பு இல்லாததால், மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. கரும்புக்கு கூடுதல் ஊக்கத்தொகை அளித்தால் தான், விவசாயிகள் உற்பத்தி செய்வர். இந்த ஆலைகளை நம்பி உள்ள தொழிலாளர்கள், ஆலை பணியாளர்களின் வாழ்வாதாரம், அரசின் கையில் உள்ளது. உடனடியாக விவசாய சங்க பிரதிநிதிகள், ஆலை உரிமையாளர்களை அழைத்து பேசி, அரசு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


- நமது சிறப்பு நிருபர் -


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X