சரியான தண்டனை!விதிமுறை மீறி வாகனம் இயக்கிய 11 ஆயிரம் பேரின் லைசென்ஸ் ரத்து!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2018
00:37

கோவை:விதிமீறி வாகனம் ஓட்டிய, 11 ஆயிரத்து, 367 பேரின் லைசென்சை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ரத்து செய்துள்ளனர். இதன் பிறகாவது, சாலை விதிமுறைகளை மீறுவோர், எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார் போலீஸ் கமிஷனர் பெரியய்யா.

கோவை மாநகரில், அதிகரித்து வரும் வாகன அடர்த்திக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறைந்தபாடில்லை. இதை தடுக்க, மாநகர போக்குவரத்து போலீசார், பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கு பலனாக, மாநகர பகுதியில் நடப்பாண்டு விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2017ம் ஆண்டு ஜன., முதல் ஆக.,வரை மாநகர பகுதிகளில் மொத்தம், 887 விபத்துகள் நடந்து, 201 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டு அதே காலக்கட்டத்தில், 761 விபத்துகள் ஏற்பட்டு, 102 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஆக., வரை, 99 உயிரிழப்புகள் குறைந்துள்ளது, புள்ளி விபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா கூறியதாவது:

மாநகர பகுதியில் விபத்து ஏற்படும், 22 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் வாகனங்களின் அதிவேகத்தை குறைக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து போலீசார், விதிமீறிய வாகன ஓட்டிகளிடம், 'போட்டோ' ஆதாரத்துடன், அபராதம் வசூலிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. போலீசார் பரிந்துரையின் பேரில், விதிமீறல் வாகன ஓட்டிகள், 11 ஆயிரத்து, 367 பேரின் லைசென்சை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ரத்து செய்துள்ளனர்.

'ஹெல்மெட்' மற்றும் 'சீட்' பெல்ட் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் பிறகாவது விதிமீறி வாகனம் இயக்குவோர், எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
10-செப்-201806:58:26 IST Report Abuse
Amirthalingam Sinniah இன்னும் தொடர்ந்துபணியாற்றுங்கள். உயிர்கள் வாழட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X