விமான டிக்கெட் ரத்து ரூ.15 ஆயிரம் இழப்பீடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2018
03:00

சென்னை:விமான டிக்கெட்டை ரத்து செய்த நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், வடபழனியைச் சேர்ந்த வெங்கடவேலன் என்பவர் தாக்கல் செய்த மனு:
என் பெற்றோர், டில்லியில் இருந்து சென்னைக்கு, தனியார் விமானத்தில் பயணம் செய்வதற்காக, ஹரியானா மாநிலம், குர்கானில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில், 7,700 ரூபாய் செலுத்தி, இரண்டு டிக்கெட் முன்பதிவு செய்தேன்.
பயண தினத்தில், நேரம் மாற்றி பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தால், மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய, டிராவல்ஸ் நிறுவனத்தில் அனுமதி கேட்டு, மாற்று டிக்கெட்
கட்டணச் செலவு, 3,500 ரூபாய் செலுத்தினேன்.
உரிய நேரத்துக்கு, விமான நிலையத்துக்கு சென்ற போது, டிக்கெட் ரத்து செய்யப்பட்டு
உள்ளதாக, விமான நிறுவனம் தெரிவித்தது.
பயணம் தடைபட்டது; டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கவில்லை. டிக்கெட் கட்டணத்துடன், 1.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
வழக்கு விசாரணையில், டிக்கெட் முன்பதிவு நிறுவனம் மற்றும் விமான நிறுவனம் ஆகியவை, தங்கள் சேவையில் குறைபாடில்லை; வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தெரிவித்தன.
இந்த வழக்கில், நீதிபதி மோனி பிறப்பித்த
உத்தரவு:
டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளன. இந்நிறுவனங்கள், மனுதாரருக்கு, டிக்கெட் கட்டணம், 7,700 ரூபாய், டிக்கெட் மாற்று கட்டணம், 3,500 ரூபாய் திரும்ப வழங்க வேண்டும்.
இத்துடன், 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு
மற்றும், 5,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.


 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X