| மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு Dinamalar
மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2018
03:01

சென்னை:மொபைல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அயப்பாக்கம், எழில் நகரில், 1,500 குடும்பங்கள் உள்ளன. வலசை செல்லும் பறவை
களுக்கு, பிடித்த இடமாக, அயப்பாக்கம் ஏரி உள்ளது. இங்கு, சில தினங்களுக்கு முன், தனியார் நிறுவனம் சார்பில், மொபைல் டவர் அமைக்க ஏற்பாடு நடந்தது.இதற்கு, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தும், டவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்தது. இதனால் நேற்று காலை, கட்டுமான பணியை தடுத்து நிறுத்திய, பகுதிவாசி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், சமரசம் பேசியதால், பகுதிவாசிகள் கலைந்து சென்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X