பூசணி விலை குறைந்தது:வருத்தத்தில் விவசாயிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2018
05:09

தேனி:கேரள வெள்ள பாதிப்பு காரணமாக, ஓணம் பண்டிகை பெரும்பாலான பகுதியில் கொண்டாடப் படவில்லை. இதனால், தேனியில் இருந்து கேரள மாநிலம் செல்லும் வெள்ளைப்பூசணி, வெள்ளரி, சர்க்கரைப்பூசணி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.


மாவட்டத்தின் குன்னுார், காமயக்கவுண்டன்பட்டி, கொடுவிலார்பட்டி, நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளைப்பூசணி, சர்க்கரைப் பூசணி, பெருவெள்ளரி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தேனி வாரச்சந்தைக்கு வெள்ளரி, வெள்ளை பூசணி, சர்க்கரைப் பூசணி தினமும் 20 டன் அளவில் விற்பனைக்காக வருகிறது.


ஆண்டுதோறும் சீசன் காலங்களில் தேனி வாரச் சந்தையில் இருந்து 20 முதல் 25 டன் அளவில் பூசணி, வெள்ளரி கேரளா சென்றது. தற்போது 15 முதல் 17 டன் அளவில் குறைவாக செல்கிறது. கேரள மாநிலத்தில் வெள்ள நிவாரண பணிகள் நடப்பதால் பண்டிகை கொண்டாடப்படவில்லை. வெள்ளரி கிலோ ரூ.8, வெள்ளைப்பூசணி கிலோ ரூ.7 ஆகவும் விலை உள்ளது.


இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் தேவை உள்ள இடங்களான காயங்குளம், சங்கணஞ்சேரி, ஆலுவா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

தேனி எம்.ஜி.ஆர்., கமிஷன்மண்டி உரிமையாளர் அறிவழகன் கூறியதாவது: எந்தாண்டிலும் இல்லாத அளவில் இந்தாண்டு கேரள மாநிலத்தில் அதிகளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிப்பில் இருந்து கேரள மாநில மக்கள் இன்னும் மீள வில்லை. அதனால் முன்பிருந்த விற்பனை தற்போது இல்லை. விலையும் பன்மடங்கு குறைந்துள்ளது. மிக முக்கியமாக ஓணம் பண்டிகை பல இடங்களில் கொண்டாடப்படாததும் விலை குறைவுக்கு முக்கியக் காரணம், என்றார்.

 

மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X