| புதுச்சேரியில் பஸ்கள் நிறுத்தம் Dinamalar
புதுச்சேரியில் பஸ்கள் நிறுத்தம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2018
08:07

புதுச்சேரி: பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடத்தப்படும் பந்த் காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை.





கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை செல்லும் பஸ்கள் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகின்றன. பந்த் காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.








கிரண்பேடி எச்சரிக்கை : பந்த்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்யவும், போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபடவும் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X