வாகனங்களில் சக்தி வாய்ந்த விளக்குகள்: இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2018
09:07

கரூர்: கரூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.


கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில் கனரக வாகனங்களான லாரிகள், டிப்பர் லாரிகள், தனியார் பஸ்கள், கார்கள், ஆம்னி பஸ்கள், 100 கி.மீ.,க்கும் மேல், அதிவேகத்தில் செல்கின்றன. இரவில் இவ்வாறு செல்லும் வாகனங்களில், பெரும்பாலானவற்றில், அதிக ஒளி உமிழும் சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வெளிச்சத்தால், எதிரே பைக்கில் வருபவர்கள், நிலை குலைகின்றனர். இதனால், இச்சாலையில், அடிக்கடி விபத்து நடக்கிறது. பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் இந்த வெளிச்சத்தால் பெரும் அவதிப்படுகின்றனர்.


இது குறித்து இருசக்கர வாகன ஓட்டிகள் கூறியதாவது: அதிக திறன் வாய்ந்த விளக்குகளை, சொகுசு வாகனங்களில் பலர் பொருத்தியுள்ளனர். இவைகள் இரவில் எதிரே வாகனம் ஓட்டி வருபவர்களை தடுமாற செய்யும் வகையில் வருகின்றன. எனவே வாகன விதிகளின்படி எவ்வளவு திறன் உள்ள விளக்குகளை பொருத்த வேண்டும் என, அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில், அதிக திறன் கொண்ட விளக்குகளை பொருத்திச் செல்லும் வாகனங்களை தீவிர ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X