ஈஷாவின் 'இளைஞரும் உண்மையும்'நிகழ்ச்சி டில்லியில் தொடங்கியது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2018
09:43

ஒரே மாதத்தில் 18 புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் நடக்க உள்ளது

புதுடில்லி: கல்லூரி இளைஞர்களின் கேள்விகளுக்கு சத்குரு அவர்கள் நேரடியாக பதில் அளிக்கும் 'இளைஞரும் உண்மையும்' என்ற நிகழ்ச்சி டில்லியில் நேற்று (செப்.4) கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சி இம்மாதத்தில் இந்தியாவின் பல்வேறுமாநிலங்களில் உள்ள 18 கல்வி நிலையங்களில் நடைபெற உள்ளது.
மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இளைஞர்களாக கொண்டுள்ள இந்தியா இளைஞர்களின் தேசமாக திகழ்கிறது.இந்த தருணத்தில் இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும்உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் 'இளமையும் உண்மையும்' (Youth&Truth) என்ற ஒரு மிகப்பெரியமுன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. அதன்படி, டில்லி, கோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு,ஐதராபாத், மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங்க், வாராணாசி என நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற 18கல்வி நிலையங்களில் இம்மாதம் 'இளமையும் உண்மையும்' என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்துகொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளின்கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். இதில் காதல், காமம், உறவுமுறை, தேசப்பற்று, மதம், ஆன்மிகம், கடவுள், சமூக நீதி, பகுத்தறிவு , அரசியல், ஊழல், கலாச்சாரம். என மாணவர்கள் எத்தகைய கேள்விகளையும் சத்குரு அவர்களிடம் கேட்கமுடியும். மேலும், இந்நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள், கேள்வி - பதில்கள் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தப்பட உள்ளது.
இதுதவிர, இந்திய இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ள விளையாட்டு வீரர்கள், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் எனபல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய நபர்களும் இந்த முன்னெடுப்பில் ஈஷாவுடன் கரம் கோர்க்க உள்ளனர்.
இந்நிலையில், இதன் முதல் நிகழ்ச்சி டில்லியில் உள்ள ஸ்ரீ ராம் வணிக கல்லூரியில் நேற்று (செப்.4) கோலாகலமாகதொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.2 மணி நேரத்துக்கு மேலாக விறுவிறுப்பாக நடந்தஇந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஏராளமான கேள்விகளை மாணவர்கள் கேட்டறிந்தனர். அந்தகேள்விகளுக்கு சத்குரு அவர்கள் தன்னுடைய வழக்கமான நகைச்சுவை கலந்த மொழியில் தெள்ள தெளிவாக பதில் அளித்தார்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X