திருப்பூரில் கடைகள் அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
01:58

திருப்பூர்:திருப்பூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று காங்., கட்சி சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் தி.மு.க.- ம.தி.மு.க.,- கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் போராட்டத்துக்கு கடைகள் தரப்பில் ஆதரவு இருந்தது. திருப்பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம், வெள்ளக்கோவில், பெருமாநல்லுார், குன்னத்துார் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், 95 சதவீதத்துக்கும் மேல் அடைக்கப்பட்டிருந்தன.

அனுப்பர்பாளையம் பாத்திரப்பட்டறை, பூண்டி சிற்ப தொழிற்கூடங்கள் செயல்படவில்லை. திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரு உழவர் சந்தைகளும், மூடப்பட்டன.

வாரம் தோறும் திங்களன்று கூடும் மாட்டுச் சந்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் வெளியூர்களிலிருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வந்த காரணத்தால் நீண்ட நேரத்துக்குப் பின் சந்தை செயல்படத் துவங்கியது. தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

பெட்ரோல் பங்க், மருந்து கடை, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், போஸ்ட் ஆபீஸ், பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின.

ஆட்டோ, டாக்சி, சரக்கு வாகனங்கள் மிகக்குறைந்தளவில் இயங்கின. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. பனியன் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாத காரணத்தால் அவற்றில் வழக்கமான பயணிகள் கூட்டம் இல்லை.

ஒரு சில ஓட்டல்கள் மூடப்பட்ட நிலையிலும் அவற்றின் அருகே, பார்சல் உணவு வகைகள் விற்பனை நடந்தது. மாலை நேரம் கடைகள் திறக்கப்பட்டதும், சகஜ நிலை திரும்பியது.


அவிநாசி

அவிநாசி, சேவூர், கருவலுார் உட்பட அவிநாசி சுற்றுப்புற அனைத்து இடங்களில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

அரசு, தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. ஆட்டோ, வாடகை கார்கள் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால், ரோட்டில், மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. பெட்ரோல் பங்க், மருந்துக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

தள்ளுவண்டி கடைகளில், டீ, ஸ்நாக்ஸ், மதிய உணவு விற்பனை அமோகமாக நடந்தது.


பல்லடம்

பல்லடம் மற்றும் பொங்கலுாரில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ, டூரிஸ்ட் வேன்கள் ஓடவில்லை. பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. வெளியூர் செல்லும் பயணிகள், நேற்று முன்தினம் இரவே புறப்பட்டு சென்றனர். தள்ளுவண்டி டீக் கடைகளில் விற்பனை களைகட்டியது. பஸ் ஸ்டாண்ட், கடைவீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X