| செப். 16 ல் சைக்கிள் போட்டி Dinamalar
செப். 16 ல் சைக்கிள் போட்டி
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
03:13

மதுரை:மறைந்த முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு செப்., 16 ல் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சைக்கிள் போட்டி நடக்கிறது.

13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவிகளுக்கு 10 கி.மீ., மாணவர்களுக்கு 15 கி.மீ., நடக்கிறது. 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவிகளுக்கு 15 கி.மீ., மாணவர்களுக்கு 20 கி.மீ., 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவிகளுக்கு 15 கி.மீ., மாணவர்களுக்கு 20 கி.மீ., போட்டி நடக்கிறது.


இந்த போட்டியில் கியர் சைக்கிள் மற்றும் ரேஸ் சைக்கிள் அனுமதி இல்லை. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தலைமையாசிரியரிடமிருந்து வயது சான்றிதழுடன் அன்று காலை 7:00 மணிக்கு ஆஜராக வேண்டும். முதல் 10 இடங்களை பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவோர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X