4,625 டன் பச்சை பயறு கொள்முதல் செய்ய இலக்கு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
03:52

மதுரை:மதுரை, சேலம் உட்பட ஆறு மாவட்ட விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலையில் 4,625 டன் பச்சைபயறு கொள்முதல் செய்ய தேசிய கூட்டுறவு வணிக (நாபெட்)நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.


விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்க செய்யும் நோக்கில், பல வணிக திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது.

கடந்தாண்டு உளுந்து கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு வெளிமார்க்கெட் விலையை விட கூடுதல் விலை வழங்கப்பட்டது.


நடப்பாண்டு காரீப் பருவத்தில் (செப்டம்பர் -- அக்டோபர்) அறுவடையாகும் பச்சைபயறுகளை கொள்முதல் செய்ய தேசிய கூட்டுறவு வணிக நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


மதுரை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விற்பனை குழுக்கள் மூலம் குறைந்தபட்ச ஆதாரவிலையாக கிலோ 69.75 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். தற்போது கிலோவிற்கு 55 ரூபாய் மட்டுமே வியாபாரிகள் தருகின்றனர். ஆறு மாவட்டங்களில் 6,500 டன் பயறு விளையும். இதில் 4,625 டன் கொள்முதல் செய்வதன் மூலம் விவசாயிகள் லாபம் பெறுவர்.


* மதுரை விற்பனை குழு செயலாளர் டி.காமராஜ் கூறியதாவது: திருமங்கலம், உசிலம்பட்டி விற்பனை குழுக்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.

நடவு செய்த நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி சேமிப்பு கணக்கு எண்ணை வழங்கி பெயர் பதிய வேண்டும். செப்டம்பர், அக்டோபரில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இதற்கான விலை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு விவசாயியிடம் நாள் ஒன்றுக்கு 2,500 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X