| கடைகள் மீது கல்வீச்சு:திருமங்கலத்தில் 130 பேர் கைது Dinamalar
கடைகள் மீது கல்வீச்சு:திருமங்கலத்தில் 130 பேர் கைது
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
03:53

திருமங்கலம்:திருமங்கலத்தில் நேற்று பாரத்பந்த் நடத்திய தி.மு.க., காங்., கட்சியினர் திறந்திருந்த கடைகள் மீது கல்வீசி தாக்கினர். ஒருவர் காயமடைந்தார். போலீசார் 130 பேரை கைது செய்தனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து எதிர்கட்சிகள் நேற்று பந்த் அறிவித்த நிலையில், திருமங்கலத்தில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பஸ் மற்றும் இதர வாகன போக்குவரத்து பாதிப்பின்றி நடந்தது. காலை 9.30 மணிக்கு காங்., தெற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், தி.மு.க,. நகர செயலாளர் முருகன், ம.தி.மு.க., நகர செயலாளர் அனிதாபால்ராஜ் தலைமையில் 130 பேர் உசிலம்பட்டி ரோட்டில் ஊர்வலமாக வந்து கடைகளை அடைக்குமாறு வலியுறுத்தினர். உசிலம்பட்டி- விருதுநகர் ரோடு சந்திப்பில் உள்ள ஒரு பேக்கரியின் மீது கல்வீசி தாக்கினர். டீ பட்டறை பாய்லர்களை கீழே தள்ளி விட்டு, கண்ணாடி டம்ளர்களை நொறுக்கினர். கடை மேலாளர் ஆனந்தன் காயமடைந்தார். கடைக்குள் இருந்த பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் தப்பி ஓடினர். பின்னர் மதுரை ரோட்டில் இரண்டு தனியார் உணவகங்களை மூடச்சொல்லி முற்றுகையிட்டு தகராறு செய்தனர். வாடிக்கையாளர்கள் உள்ளே சாப்பிட்டுக்கொண்டு இருந்ததால், டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஓட்டலை அடைக்க வேண்டாம் எனக்கூறி ஊர்வலத்தில் வந்த 130 பேரையும் கைது செய்தனர். அப்போது வாக்குவாதம் செய்த சிலரை போலீசார் கட்டாயப்படுத்தி வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் நகரின் முக்கிய வீதிகளில் சென்று, கடைகளை திறக்குமாறு அனைத்து வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தினர். இதனால் அடைக்கப்பட்ட கடைகள் அடுத்த 15வது நிமிடத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. நகரின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை.கள்ளிக்குடியில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் தலைமையில் 17 பேர் ரோடு மறியலுக்கு முன்றனர். அவர்களை எஸ்.ஐ., குபேந்திரன் கைது செய்தார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X