வனச்சரகர் இல்லை நாள்தோறும் தொல்லை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
04:17

பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரம்பாடியில் வனச்சரகர் இல்லாததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

கூடலுார் சேரம்பாடி வனச்சரக பகுதியில் அதிகளவில் குடியிருப்புகள், கிராமங்கள், டான்டீ மற்றும் தனியார் தோட்டங்கள் உள்ளன. இப்பகுதி மாநில எல்லையாகவும் உள்ளது.

அத்துடன் இந்த வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், அதிகளவில் யானைகள் வந்து செல்வதால், அடிக்கடி யானை-மனித மோதல் ஏற்படுகிறது. இதனால், இங்கு வனத்துறையினரின் கண்காணிப்பு அவசியாம உள்ளது. இந்நிலையில், இங்கு பணியாற்றிய வனச்சரகர் பறக்கும் படை வனச்சரகராக பணிமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, பிதர்காடு வனச்சரகர், இந்த வனச்சரகத்தை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

இதனால், வன விலங்குகளால் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. வனச்சரகர் மட்டுமின்றி இங்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு வனவர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், தற்போது பணியில் உள்ள வனக்காப்பாளர், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டியிருப்பதுடன், இரவு நேர பணிகளிலும் ஈடுபடுவதால், பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், பறக்கும்படை வனச்சரகருக்கு வாகனம் இல்லாததால், பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்சில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏதேனும் வனக்குற்றங்கள்; அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, சேரம்பாடி வனச்சரகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X