திண்டுக்கல் மாவட்டத்தில் 759 பேர் கைது:மாட்டு வண்டியில் டூவீலர் ஊர்வலம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
04:31

திண்டுக்கல்:பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்பட 759 பேர் கைது செய்யப்பட்டனர்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் நேற்று பந்த் நடத்தின. நேற்று எதிர்கட்சிகளின் போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் போராட்டம் பெரிய நிறுவனங்கள், பிரபல ஓட்டல்கள் என 20 சதவீதம் மூடப்பட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.


திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமையில் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர்.

இதில் மாநில குழு உறுப்பினர் பாண்டி, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநில செயலாளர் ராம்குமார் உள்பட 80 பேர் கைதாகினர். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மணிகண்டன் தலைமையில் 10 பேர் பஸ் ஸ்டாண்டுக்குள் பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை கைது செய்தனர். மாட்டு வண்டியில் டூவீலர்களை ஏற்றி ஊர்வலம் வந்தனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், நத்தம் ரவுண்டானா, கோபால்பட்டி, சின்னாளபட்டி, வத்தலக்குண்டு, பழநி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, குஜிலியம்பாறை, அய்யலுார் உள்பட 18 இடங்களில் மறியல் நடந்தது. இதில் 68 பெண்கள் உள்பட 759 பேர் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.


பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே மறியல் செய்த பழநி நகராட்சி முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம், நகரசெயலாளர் கந்தசாமி, காங்., வி.சி., கட்சி நிர்வாகிகள் மறியல் செய்தனர். மேலும் தொப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, ஆயக்குடியில் பகுதியிலும் ரோடு மறியல் செய்தனர்.

ஒட்டன்சத்திரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, ஒட்டன்சத்திரத்தில் நடந்த பந்தில் வியாபார நிறுவனங்கள் மதியம் 1:௦௦ மணி வரை மூடப்பட்டிருந்தன. இருந்த போதிலும் டீக்கடைகள், மருந்து கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

 

மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X