| 3 முக்கிய பதவிகளுக்கு பணி நியமன அறிவிப்பு Dinamalar
3 முக்கிய பதவிகளுக்கு பணி நியமன அறிவிப்பு
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
06:18

சென்னை பல்கலையில், மூன்று முக்கிய பதவிகளுக்கு, பணி நியமன அறிவிப்பு வெளியிடப்

பட்டுள்ளது.சென்னை பல்கலையில், பல்வேறு முக்கிய பதவிகள், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இந்த பதவிகளில், அவ்வப்போது கூடுதல் பொறுப்புகளில் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.


அந்த வகையில், முக்கிய பதவிகளான தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தொலை நிலை கல்வி இயக்குனர் உள்ளிட்ட பல பதவிகள், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளன. அவற்றில், பொறுப்பு அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.


இந்நிலையில், மூன்று பதவிகளுக்கு மட்டும், புதிய அதிகாரிகளை நியமிக்க, சென்னை பல்கலை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, கல்லுாரி மேம்பாட்டு கவுன்சிலுக்கான, முதல்வர் என்ற பதவி நிரப்பப்பட உள்ளது.இந்த பதவியில் நியமிக்கப்படும் அதிகாரி, சென்னை பல்கலையின் இணைப்பில் உள்ள, 138 கல்லுாரிகளுக்கான நிர்வாகத்தை ஒருங்கிணைப்பார்.

அதேபோல், சென்னை பல்கலையின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர், மாணவர் ஆலோசனை மையத்தின் இயக்குனர் ஆகிய பதவிகளுக்கும், பணி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த நியமனங்களை பொருத்தவரை, பல்கலையின் சிண்டிகேட் அமைப்புக்கே, அனைத்து உரிமைகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு, செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. கூடுதல் விபரங்களை, பல்கலையின் http://www.unom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். - நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X