குடும்பத்துடன் நிம்மதியாக வசிக்க போராட்டம்:'சுனாமி'யால் பாதிக்கப்பட்டவருக்கு ஆறு முறை பட்டா வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2018
06:44

காஞ்சிபுரம்:'சுனாமி'யால் பாதிக்கப்பட்டவருக்கு, 14 ஆண்டுகளில் ஐந்து முறை பட்டா வழங்கியும், அந்த இடங்களில் வசிக்க முடியாமல், நேற்று மீண்டும், வேறு இடம் வழங்கப்

பட்டுள்ளது. 'புதிய இடத்திலாவது, நிம்மதியாக வசிக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்' என, சுனாமியால் பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுகாவிற்குட்பட்ட, கானத்துார் ரெட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல், 51. இவர், தன் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன், ரெட்டிகுப்பத்தில் வசித்து வந்தார்.கடந்த, 2004, டிச., 26ல் ஏற்பட்ட சுனாமி பேரலையில், சண்முகவேலை, சுனாமி அலைகள் இழுத்து சென்றது.


மண்ணுக்குள் புதைந்திருந்த அவர், ஒரு நாள் கழித்த பின்பே, மீட்கப்பட்டார்.

உடல்நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு, சில ஆண்டுகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண உதவி மற்றும் வீடு கட்டிக்கொள்ள இடம் போன்றவற்றை, தமிழக அரசு வழங்கியது.


அதன்படி, சண்முகவேலுக்கும், திருப்போரூர் தாலுகாவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கிராம மக்கள் எதிர்ப்பு மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் தொல்லை காரணமாக, அப்பகுதிகளில் வசிக்க முடியவில்லை.தொடர்ந்து, காஞ்சிபுரம் அடுத்த மேல்கதிர்பூர், செய்யூர் தாலுகா போன்ற பகுதிகளில், ஐந்து முறை இடம் வழங்கப்பட்டது. ஆனால், அங்கும் பல பிரச்னைகள் இருந்ததால், அந்த பகுதிகளில் வசிக்க முடியவில்லை.


எனவே, அவருக்கு அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட நிலப்பட்டாக்கள் மாவட்ட நிர்வாகத்தால், ரத்து செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன.இந்நிலையில், திருப்போரூர் தாலுகாவில், மாம்பாக்கம் வருவாய் கிராமத்தில், குடியிருக்க நிலப்பட்டா வழங்கி, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கான பட்டாவை, மக்கள் குறைதீர் கூட்டத்தில், சண்முகவேல் பெற்றார்.


இது குறித்து, சண்முகவேல் கூறியதாவது:இதற்கு முன், பல இடங்களில் சந்தித்த பிரச்னைகள், மாம்பாக்கம் பகுதியிலும் சந்திக்காத வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடும்பத்துடன் நிம்மதியாக வசிக்க, அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.சுனாமி ஏற்பட்டு, 14 ஆண்டுகள் கழித்து, இன்றைக்கு கூட, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நிலை பழைய படி திரும்பவில்லை என்பதற்கு, சண்முகவேல் உதாரணமாக உள்ளார்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X