| மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சீர்படுத்த வாரியம் வலியுறுத்தல் Dinamalar
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சீர்படுத்த வாரியம் வலியுறுத்தல்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
00:05

சென்னை:மழைநீர் கட்டமைப்பு மூலம் சேகரமாகும் மழைநீரை, கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் செலுத்துவதால், நீரின் தரம் உயர்ந்துள்ளதாக, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.


சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வட கிழக்கு பருவமழைக்கு முன், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது, ஏற்கனவே கட்டமைப்புகளை உருவாக்கியவர்கள், முறையாக பராமரிப்பது குறித்து, பொதுமக்களிடையே, குடிநீர் வாரியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன.


அண்ணா நகர், திருமூலர் காலனி, ஆதிசங்கர் தெரு, தங்கம் காலனி, 2வது தெரு உள்ளிட்ட பகுதிகளில், நிலத்தடி நீரின் தரம் உயர்ந்து இருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், நீரில் கரைந்துள்ள மொத்த திடப் பொருட்கள், 550 பி.பி.எம்., அளவிற்கு கீழ் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, உடனடியாக உருவாக்குதல் மற்றும் பராமரிப்பதன் மூலம், நிலத்தடி நீரின் அளவு உயர்வதோடு, அதன் தரமும் உயரும்.


பொதுமக்கள் அனைவரும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை செயல்படுத்த முன்வர
வேண்டும்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X