100 நாள் திட்டத்தில் முறைகேடு? திட்ட இயக்குனரிடம் மக்கள் புகார்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
00:49

காஞ்சிபுரம்:களக்காட்டூர் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், முறைகேடு செய்யப்படுவதாக, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம், பொதுமக்கள் நேற்று புகார் அளித்தனர்.


காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சியைச் சேர்ந்த சிவபிரகாசம் என்பவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமாரிடம் மனு அளித்துஉள்ளார்.அதன் விபரம்:


காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் கிராமத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் நடக்கின்றன.வேலை செய்யாத நபர்கள், வேலை செய்வதாக பதிவுகள் பராமரிக்கப்படுகின்றன. வேலை செய்யாத நபர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு, அந்த பணம் முறைகேடாக திருடப்படுகிறது. இதற்கு, ஊரக வளர்ச்சித் துறையின் கடைநிலை ஊழியர்கள் துணையாக உள்ளனர்.


முறைகேடு குறித்து, உயரதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும். வேலை செய்ய
வேண்டும் என கோரிக்கை விடுக்கும் நபர்களுக்கு, பணி வழங்க மறுக்கின்றனர்.இத்திட்டத்தில், முறைகேடு செய்து கொள்ளையடிப்பதால், திட்டத்தின் நோக்கம் சென்றடையவில்லை.


மாவட்ட ஆட்சியரிடம், 9ம் தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.எனவே, இந்தாண்டு உள்தணிக்கை செய்யும்போது, எங்களையும் இணைத்து உள்தணிக்கை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X