'ஆரோக்கியமான மக்களே வலிமையான தேசம்'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
01:16

பொன்னேரி:தேசிய ஊட்டசத்து மாதத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், ஆரோக்கியமான மக்களே வலிமையான தேசம் என, உறுதிமொழி ஏற்கப்பட்டது.


பொன்னேரி அரசு பொது மருத்துவமனை சார்பில், நேற்று, தேசிய ஊட்டசத்து மாதத்தை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் தயாளன், பொன்னேரி எம்.எல்.ஏ., பலராமன், ஆர்.டி.ஓ., முத்துசாமி, தலைமை மருத்துவர் அனுரத்னா உட்பட பலர் பங்கேற்றனர்.


பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களை ஊக்குவிக்கும் விதமாக பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பெற்ற, எட்டு பேருக்கு சிறப்பு சான்றிதழ், நினைவு பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களால், கர்ப்பிணிகள், மகப்பேறு அடைந்தவர்கள் எந்த வகையான ஊட்டச்சத்துக்களை உண்ண வேண்டும் என்பது குறித்து நாடகம், நாட்டுப்புற பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


விழாவில் பங்கேற்றவர்கள் ஊட்டசத்து தொடர்பான உறுதிமொழியை ஏற்றனர். அதில், குழந்தைகள் மற்றும் பெண்களை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டு வலிமையானவர்களாக மாற்றுவேன்.ஆரோக்கியம் என்றால், சத்தான உணவு, துாய்மையான குடிநீர் மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் என்பதை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்ப்பேன்.


ஆரோக்கியமான மக்களால் ஆனதே வலிமையான தேசமாகும் என்பதை ஒவ்வொரு வீட்டிலும், கிராமத்திலும், நகரத்திலும் பேரொளியாக எழுப்புவேன்.இவ்வாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 

மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X