| தண்ணீர் லாரி கவிழ்ந்து இருவருக்கு காயம் Dinamalar
தண்ணீர் லாரி கவிழ்ந்து இருவருக்கு காயம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
01:42

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, நேற்று காலை 7:00 மணிக்கு, அதிவேகத்தில் சென்ற தண்ணீர் லாரி, நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில், தண்ணீர் லாரி ஓட்டுனர் திவாகர், 41 என்பவருக்கு வலது காலில் படுகாயம் ஏற்பட்டது.

லாரியின் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த, முத்திபாளையத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர், லாரியின் வேகத்தை கண்டு பயத்தில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு, சில நிமிடங்களிலேயே, கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தினர். அதிகாலையில் விபத்து நடந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X