| கபடி போட்டி: பரிசளிப்பு விழா Dinamalar
கபடி போட்டி: பரிசளிப்பு விழா
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
02:32

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவிலில் மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.


காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ., முருகுமாறன் தந்தை புலவர் நாகராசனார் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா விளையாட்டு திடலில் மாநில அளவிலான கபடி பேட்டி நடந்தது.போட்டியில் கடலுார், கன்னியாகுமரி, திருச்சி, நாகை, தஞ்சாவூர், சென்னை, பெரம்பலுார், அரியலுார், விழுப்புரம், சேலம், திருவாரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 62 அணிகள் விளையாடின.


இதில் காட்டுமன்னார்கோவில் நண்பர்கள் கபடி குழு முதல் பரிசையும், அரியலுார் மாவட்டம் வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் கபடி குழு இரண்டாம் பரிசும், பெரம்பலுார் மாவட்டம், வானவில் கபடி குழு மூன்றாம் பரிசும் பெற்றனர்.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, முருகுமாறன் எம்.எல்.ஏ., தமைமை தாங்கினார். ஆசிரியர் அருள்பிரகாசம், நாகா காஸ் ஏஜன்சி இயக்குநர் சகாதேவன், ஆசிரியர் சுபாஷ் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் கணேசமூர்த்தி வரவேற்றார். எம்.பி.,க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் ஆகியோர் பரிசு வழங்கினர்.


விழாவில் குணசேகரன். சண்முகம், நவநீதகிருஷ்ணன், பூமாலை கேசவன், பாலசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X