| சம்பா சாகுபடிக்கு சன்ன ரக நெல் விதைகள் வழங்கல் Dinamalar
சம்பா சாகுபடிக்கு சன்ன ரக நெல் விதைகள் வழங்கல்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
02:36

விருத்தாசலம்:விருத்தாசலம் வேளாண் அலுவலகத்தில் சம்பா சாகுபடிக்கான விதைகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.


வேளாண் உதவி இயக்குனர் ரமேஷ் செய்திக்குறிப்பு:விருத்தாசலம் வட்டாரத்தில் 16 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நாற்று விடும் பணிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளதால், பி.பி.டி.,5204 (ஆந்திரா பொன்னி) ரகத்தின் மரபுக்கூரை சேர்த்து வெளியிடப்பட்ட 'சம்பா சப்.1' ரக நெல் விதைகள் 40 கிலோ கொண்ட சிப்பம் 1,020 ரூபாய்க்கு மானியத்தில் வழங்கப்படுகிறது.


அதேபோன்று, திரூர்குப்பம் ஆராய்ச்சி நிலையத்தில் 2015ல் வெளியிடப்பட்ட 130 நாட்கள் கொண்ட சன்ன ரகமான 'டி.கே.எம்.,-13' ரக நெல் விதைகள், 40 கிலோ சிப்பம் 1,020 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த ரகம் இலை சுருட்டு புழு, குருத்துப் பூச்சி மற்றும் துங்ரோ வைரஸ் நோய் போன்றவற்றை எதிர்த்து வளரும் தன்மையுடையது.


இந்த விதைகள், விருத்தாசலம் வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்படுகின்றன. மேலும், பசுந்தாள் பயிரான தக்கபூண்டு விதைகள் கிலோ 60 ரூபாய்க்கு மானிய விலையிலும், கோ.3 ரக வரகு, கோ.13 ரக கேழ்வரகு விதைகளும் மானியத்தில் வழங்கப்படுகின்றன. விதைகள் வாங்க வரும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணை கொண்டுவர வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X