| காட்டாறு அணைக்கரை பணி கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு Dinamalar
காட்டாறு அணைக்கரை பணி கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
02:40

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம், விசூர் பகுதியில் வெள்ளவாரி காட்டாறு பகுதியில் அணைக்கரை அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம், விசூர் கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வெள்ளவாரி காட்டோடை அருகே வீடு கட்டியிருந்த 15 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர்.இதனையடுத்து பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் காட்டோடை பகுதியில் வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.


பெரியகாட்டுப்பாளையம், விசூர், மேலிருப்பு பகுதிகளில் வெள்ளவாரி காட்டோடை பகுதியில் பொதுப்பணித் துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கரை அமைக்கும் பணி கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வருகிறது.இப்பணியை நேற்று கலெக்டர் அன்புச்செல்வம் பார்வையிட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மேலிருப்பு கிராமத்தில் ஓடையின் அருகே தரமில்லாமல் கட்டப்பட்ட பணிகளை பார்வையிட்டு வருவாய்த்துறை மூலம் இடத்தை அளந்து பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


ஆய்வின்போது தாசில்தார் ஆறுமுகம், பி.டி.ஓ.,க்கள் குமரன், மகாலட்சுமி, துணை தாசில்தார் சிவராமன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கபிலன் உடனிருந்தனர்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X