| சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் Dinamalar
சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
03:41

உடுமலை:மறையூரில், ஆறு லட்சம் மதிப்புள்ள இரண்டு சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை அருகேயுள்ள மறையூரில், நேற்று முன்தினம் இரவு, நகர பகுதியிலுள்ள அரசு பள்ளி அலுவலகம் பின்புறம் இருந்த சந்தன மரத்தையும், கோவில்கடவு ரோட்டில், தனியார் நிலத்திலும் இருந்த, 30 வயதான இரண்டு சந்தன மரங்கள், வெட்டி கடத்தப்பட்டது.

ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தலா எட்டு அடி உயரம் கொண்ட சந்தன மரக்கட்டைகளை வெட்டிய திருடர்கள், கிளைகளை அங்கேயே விட்டுச்சென்றுள்ளனர். மறையூர் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். வனத்துறை அலுவலகம் அருகிலேயே சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X