பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
04:11

விழுப்புரம்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செப்., 2010 வரை தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தேர்வர்களால் நேரில் பெறப்படாமலும், தபால் மூலம் உரிய தேர்வர்களுக்கு அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் கடலுார் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் திரும்ப பெறப்பட்டுள்ளது.


தேர்வுதிட்ட விதிமுறைகளின்படி மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டாண்டுக்கு பின்னர் அழிக்கப்படலாம் என்று உள்ளது. எனவே செப்., -2010 வரை தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ் பெறப்படாத தனித்தேர்வர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும்.
இத்தருணத்தை பயன்படுத்தி, ஆதார் அட்டை நகலுடன் ஒரு வெள்ளைத்தாளில் மதிப்பெண் கோரும் விவரத்தை குறிப்பிட்டு எழுதி, தேர்வு எண், தேர்வெழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வெழுதிய பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு ரூ.45-க்கான தபால் வில்லை ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதிய உறை ஒன்றை இணைத்து “அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம் மஞ்சக்குப்பம், கடலுார்” என்ற முகவரிக்கு வரும் 18ம் தேதிக்குள் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.


மேலும், மேற்கண்ட விவரப்படி செப்., -2010க்கு பின் தேர்வெழுதிய பருவங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளலாம். செப்., -2010 வரை பருவத்திற்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பெற வரும் 18 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X