| பி.டி.எஸ்., படிப்பிற்கு இறுதி கலந்தாய்வு Dinamalar
பி.டி.எஸ்., படிப்பிற்கு இறுதி கலந்தாய்வு
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
05:21

புதுச்சேரி:பி.டி.எஸ்., கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான இறுதி கட்ட கவுன்சிலிங் நேற்று நடந்தது.


எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு இறுதிகட்ட கவுன்சிலிங் முடிந்ததையடுத்து, பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) படிப்பில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 'நீட்' மதிப்பெண் அடிப்படையில் நேற்று இறுதிக்கட்ட கவுன்சிலிங் நடந்தது. இதில், நீட் மதிப்பெண் 552 முதல் 96 வரை எடுத்த மாணவர்கள் பங்கேற்றனர்.


காலை 11:00 மணிக்கு துவங்கிய கால்நடை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கில், நீட் மதிப்பெண் 568 முதல் 119 வரை எடுத்த மாணவர்கள் பங்கேற்றனர். பி.ஏ., எல்.எல்.பி., படிப்புகளில் நிரம்பாத இடங்களுக்கும், பி.எஸ்சி., தோட்டக்கலை, விவசாயம் படிப்புகளுக்கான நேற்று கவுன்சிலிங்கும் நடந்தது.


கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த மாணவர்கள், வரும் 14ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும் என சென்டாக் தெரிவித்துள்ளது. இன்று, 12ம் தேதி பி.பார்ம், உயிரியல் சார்ந்த இதர படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. 14ம் தேதி பி.டெக்., படிப்புகளுக்கு இறுதி கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X